[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.
  • BREAKING-NEWS தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் ரோகித் சர்மா அசத்தல் சதம். போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே முடிவுக்கு வந்தது முதல்நாள் ஆட்டம்
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் பரப்புரை ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

ராஸ் அல் கைமா கொடூர விபத்தில் சிக்கி 4 பேர் பலி

accident-in-uae-4-dead

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற கொடூரமான கார் விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஒரு பகுதி ராஸ் அல் கைமா. இங்குள்ள முகமது பின் சையத் சாலையில் நேற்று மாலை சென்ற கார் ஒன்று விபத்தில் சிக்கியது. கார் வேகமாக சென்ற நிலையில், திடீரென காரின் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்திற்குள்ளானது. இதில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 3 பேர் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்தவர்கள் என்பதும் ஒருவர் ஆசியாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

விபத்தில் சிக்கியபோது கார் வேகமாக சென்றுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close