[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த லண்டன் மாணவிக்கு பிறந்த ஆண் குழந்தை உயிரிழப்பு!

baby-of-isis-teen-shamima-begum-has-died

லண்டனில் இருந்து தப்பி ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த மாணவிக்கு பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்துவிட்டதாக, சிரிய அரசுப் படை தெரிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த மூன்று இஸ்லாமிய மாணவிகள் அங்கிருந்து தப்பி, சிரியா சென்று ஐஎஸ் பயங்கரவாத அமைப் பில் சேர்ந்தனர். அதில், 15 வயதான ஷமிமா பேகமும், கடிஜா சுல்தானாவும் பங்களாதேஷைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். மற்றொரு மாண வி பெயர் அமிரா அபாஸ். இவர்கள் லண்டனில் உள்ள பெத்னல் க்ரீன் அகாடாமியில் படித்து வந்தனர்.  ஒரு நாள், ’வெளியே சென்று வருகிறோ ம்’ என்று வீட்டில் கூறிவிட்டு சென்ற அவர்கள், பிறகு சிரியாவுக்குத் தப்பி ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தன. அப்போது இந்த செய்தி லண்டனில் பர பரப்பானது.

நான்கு வருடத்துக்குப் பிறகு, தற்போது சிரியாவின் அகதி முகாமில் இருக்கும் ஷமிமா பேகம், தான் நாடு திரும்ப வேண்டும் என்று சமீபத்தில் கோரிக்கை விடுத்தார். நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த மூன்று வாரத்துக்கு முன் ஆண்குழந்தை பிறந்தது. தனது குழந்தைக் காகவாவது லண்டன் திரும்ப வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால், பிரிட்டிஷ் அரசு, ஷமிமா பேகத்தின் குடியுரிமையை ரத்து செய்துவிட் டது. 

முன்னதாக ஷமிமா கூறும்போது, ‘’நான்கு வருடத்துக்கு முன் விருப்பப்பட்டுதான் இந்த அமைப்பில் சேர்ந்தோம். அதில் வருத்தம் இல்லை. வந்த 10 நாட்களில் இஸ்லாம் மதத்துக்கு மாறியிருந்த டச்சுக்காரர் யாகோ ரீடிஜ் (Yago Riedijk) என்பவரைத் திருமணம் செய்தேன். அவருக்கு இப்போது 27 வயது. அவர், ஐஎஸ் அமைப்பில் போரிட்டு வந்தார். எங்களுடன் வந்த சுல்தானா, குண்டு வீச்சில் உயிரிழந்து விட்டார். எனக்கு இரண்டு குழந்தை பிறந்தது. இரண்டுமே உடல் நலக்குறைவால் இறந்துவிட்டன. இப்போது 39 ஆயிரம் பேர் உள்ள அகதி முகாமில் இருக்கி றேன். என் குழந்தையை இங்கு வளர்ப்பது கஷ்டம். இதை வளர்ப்பதற்காகவாவது நான் லண்டன் திரும்ப வேண்டும். என் கணவர் சில நாட்களுக் கு முன் அமெரிக்க ஆதரவுபெற்ற அரசு படையிடம் சரணடைந்துவிட்டார்’’ என்று கூறியிருந்தார்.

பிபிசி மீடியா, யோகோவை சந்தித்து பேசியது. அவர்களிடம் யோகோ கூறும்போது, ‘’என்னை ஐஎஸ் அமைப்பினர் முதலில் ஏற்றுக்கொண்டனர். பிறகு நான் நெதர்லாந்து நாட்டின் உளவாளி எனக் கருதி துன்புறுத்தத் தொடங்கினர். இதனால் அங்கிருந்து தப்ப நினைத்தேன். இப்போது குர்தீஷ் தடுப்பு முகாமில் இருக்கிறேன். நான் நெதர்லாந்து சென்றால், பயங்கரவாத அமைப்பில் சேர்ந்ததற்காக எனக்கு ஆறுவருட சிறைத் தண்டனை கிடைக்கும். நான் எனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஹாலந்தில் வாழ ஆசைப்படுகிறேன்.

(யாகோ ரீடிஜ்)

நான் ஷமிமாவை சந்திக்கும்போது அவருக்கு வயது 15. சிறுமியாக இருந்தாள். எனக்கு அப்போது 23 வயது. அதனால் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. ஆனால், ஷமிமா தனக்கு பார்டனர் வேண்டும் என்றார். என்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பினார். வேறு வழியின்றி திருமணம் செய்துகொண்டேன்’’ என்றார்.

(அகமது அலி)

ஷமிமாவின் தந்தை அகமது அலி, பங்களாதேஷின் வடகிழக்கு பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் தனது இரண்டாவது மனைவியுடன் வசித்து வருகிறார். அவர் கூறும்போது, ‘’என் மகள் தவறான வழிகாட்டலால் திசைமாறிவிட்டாள். அவள் பிரிட்டீஷ் குடியுரிமை பெற்றவள். அவளது குடியுரிமையை அரசு ரத்து செய்யக் கூடாது. பிரிட்டீஷுக்கு அழைத்து அவர்களிடன் சட்டப்படி அவளுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம்’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ஷமிமா பேகத்துக்கு பிறந்த ஆண் குழந்தை வியாழக்கிழமை இறந்துவிட்டது. நுரையீரல் நோய் காரணமாக, முகாமில் வைத்து குழந்தை இறந்துவிட்டதாக, சிரிய அரசுப்  படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதை ஷமிமா குடும்ப வழக்கறிஞரும் உறுதி செய் துள்ளார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close