[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை அவதிக்குள்ளாக்க வேண்டும் என்பதே அமலாக்கத்துறையின் எண்ணம் - கபில் சிபல்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்த ஆண்டு இலக்கியத்திற்கு இரண்டு நோபல் பரிசுகள் 

nobel-prize-in-literature-to-be-awarded-twice-this-year

இலக்கியத்திற்கு இந்த ஆண்டு இரண்டு நோபல் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு துறைகளில் ஒவ்வொரு வருடமும் நோபல் பரிசு கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு துறையான  இலக்கியத்திற்கான நோபல் பரிசை தேர்ந்தெடுத்து பரிந்துரைக்கும் பணியை ஸ்வீடன் இலக்கிய அகாடமி மேற்கொண்டு வந்தது. கடந்த ஆண்டு, இந்த அகாடமியின் உறுப்பினர் ஒருவரின் கணவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன் முடிவுகளை அவர் முன்கூட்டியே வெளியே பகிர்ந்து விட்டதாகவும் புகார் எழுந்தது. 

இந்தப் பிரச்னை மிகப்பெரியதாக வெடித்தது. நோபல் பரிசின் நம்பகத்தன்மை போய்விட்டதாக பலரும் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து இலக்கியத்திற்கான நோபல் பரிசை அறிவிக்காமல் நோபல் அறக்கட்டளை  நிறுத்தி வைத்தது. 

இது குறித்து கடந்த வருடத்தில் அறிக்கை வெளியிட்ட நோபல் அறக்கட்டளை, நோபல் தேர்வுக்குழுவின் மீது மக்களுக்கான நம்பிக்கை குறைந்துள்ளது. இந்த நேரத்தில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்குவது சரியாகாது. அதனால் 2018ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படாது என்றும் இந்தப் பரிசு 2019ம் ஆண்டுடன் சேர்த்து வழங்கப்படும் என்றும் தெரிவித்தது. 

இந்நிலையில், அந்தப் புகார் தொடர்பான சர்ச்சைகள் தற்போது ஓய்ந்திருப்பதை அடுத்து, இலக்கியத்திற்கான இரண்டு நோபல் விருதுகளை அறிவிக்கப் போவதாக நோபல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close