[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

“அபிநந்தனின் வருகை இருநாட்டு பதட்டத்தை தணிக்கும்” - சீனா கருத்து 

china-hopes-abhinandan-s-release-will-yield-joint-investigation-of-pulwama-incident

இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் கடுமையான சூழ்நிலையை அபிநந்தனின் வருகை தணிக்கும் என சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளார் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தப் பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வந்தன. இந்திய பிரதமர் மோடியும் இத்தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அத்துடன் இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கும் என்று தெரிவித்தார்.

அதன்படி பிப்ரவரி 26 ஆம் தேதி அதிகாலையில் இந்திய விமானப் படை ‘மீராஜ் 2000’ ரக போர் விமானங்களை கொண்டு பாகிஸ்தானின் பாலகோட் பகுதியிலுள்ள பயங்கரவாதிகளின் முகாம்களில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் வசம் போர் கைதியாக சிக்கினார். அவரை இன்று  விடுவிக்கவுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று அபிநந்தன் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில் அபிநந்தன் விடுவிக்கப்படுவது குறித்து சீனாவின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் லுயு காங்(Lu Kang) கருத்து தெரிவித்துள்ளார். அவர் “அபிநந்தன் இந்தியாவிற்கு திரும்பிவருவது வரவேற்கத்தக்கது. அவரின் வருகையின் மூலம் இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவிய கடுமையான சூழல் தணியும். அத்துடன் புல்வாமா தாக்குதலை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இணைந்து விசாரிக்க வேண்டும். 

மேலும் இந்த விவகாரத்தில் தொடக்கம் முதலே இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவேண்டும் என்று சீனா வலியுறித்து வந்தது. பாகிஸ்தான் நல்ல எண்ணத்தை நான் வரவேற்கிறேன். இதேபோன்று இரு நாடுகளும் அமைதியான வழியில் பிரச்னைகளுக்கு தீர்த்துகொள்ளவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close