[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

அபிநந்தன் விவகாரம் குறித்து ஓரிரு நாளில் முடிவு: பாகிஸ்தான்

will-decide-on-status-of-indian-pilot-in-a-couple-of-days-says-pakistan-foreign-office

அபிநந்தன் விவகாரம் குறித்து ஒரூரிரு நாளில் முடிவெடுக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. 

புல்வாமாவில் கடந்த 14 ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடுரத் தாக்குத லை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு செயல்படுத்தியது. இதையடுத்து பயங்கரவாதத்தை ஆதரிக்கும்
பாகிஸ்தானுக்கும் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கும் உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா, அதிரடியாக எடுத்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. அப்போது விரட்டிச் சென்ற இந்திய விமானத்தை பாகிஸ்தான் சுட்டது. அதில் இருந்து பாராசூட் மூலம் தப்பிய இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார். அவரை பாகிஸ்தான் பிடித்து வைத்துள்ளது.

இந்நிலையில் அவரை பத்திரமாக விடுவிக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. அதே போல அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் அவரை பத்திரமாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. இதையடுத்து அபிநந்தனை விடுவிப்பது குறித்து ஓரிரு நாளில் முடிவெடுக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. 

இதுபற்றி பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் கூறும்போது, ‘அபிநந்தன் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார். அவரை விடுவிக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. அவரை விடுதலை செய்வது குறித்தும் அவரை போர் கைதியாக கருதலாமா, இல்லையா என்பது குறித்தும் இன்னும் ஓரிருநாளில் முடிவெடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close