[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.59 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.59 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“அமைதியை நிலைநாட்ட ஒரு வாய்ப்பு தாருங்கள் ” -  இம்ரான் கான் 

pm-modi-should-give-peace-a-chance-mr-khan-said-in-the-statement

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது கடுமையான விமர்சனங்களை இந்தியா முன்வைத்தது. 

இதற்குப் பதிலளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும். இந்தத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஆதாரத்துடன் வந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். அவரின் கருத்துக்குப் பதிலளித்த இந்திய அரசு, ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானிலிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இதை விட பெரிய ஆதாரம் என்ன வேண்டும் எனக் கேள்வி எழுப்பியது.

இந்நிலையில் அதே கருத்தை பாக்., பிரதமர் இம்ரான் கான் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பாகிஸ்தான் பிரதமர் அவரது வார்த்தைகளில் உறுதியாக இருக்கிறார். காஷ்மீர் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்ற ஆதாரத்தை இந்தியா வெளியிட்டால் உடனடி நடவடிக்கை எடுக்க பாக் அரசு தயாராக இருக்கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் புல்வாமா தாக்குதல் தொடர்பாக அமைதியை நிலைநாட்ட ஒரு வாய்ப்பு தாருங்கள் எனவும் இம்ரான் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார். தாக்குதல் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குர்ஷி, பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. இந்தியாவோ போரை விரும்புகிறது. நாங்கள் பதட்டமான சூழ்நிலையை தணிக்கவே விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

காஷ்மீர்  தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த பாக்., முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்,  இந்தியா தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாகவே பாகிஸ்தான் தாக்குதலை முதலில் தொடுக்க வேண்டும் என்று  கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close