[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்
  • BREAKING-NEWS நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்
  • BREAKING-NEWS பயங்கரவாதிகளை வேரோடு, கூண்டோடு அழிக்கக்கூடிய சக்தி நரேந்திர மோடிக்குத்தான் இருக்கிறது - சென்னை ராயபுரத்தில் முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS வேட்பு மனுவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் கையெழுத்திடுவதற்கு எதிரான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய மு.க.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி
  • BREAKING-NEWS அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுவோம் - டிடிவி தினகரன்

ஐஎஸ்-ல் சேர்ந்த லண்டன் மாணவி பங்களாதேஷை சேர்ந்தவரா?

shamima-begum-will-not-be-allowed-here-bangladesh-says

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ள லண்டன் மாணவி, பங்களாதேஷில் குடியுரிமை பெற்றவர் இல்லை என்று அந்நாடு தெரி வித்துள்ளது.

சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, சமூக வலைத்தளங்கள் மூலம் உலகம் முழுவதும் உள்ள இளம் வயதினருக்கு மூளை சலவை செய்து அவர்களை சிரியாவுக்கு அழைத்தது. அதன்படி பல்வேறு நாடுகளில் இருந்து பலர், சிரியா சென்று அந்த அமைப்பில் சேர்ந்துள் ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு இவர்களின் மூளைச் சலவையில் மயங்கிய லண்டனைச் சேர்ந்த மூன்று மாணவிகள், சிரியா சென்று ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தனர்.

அந்த மாணவிகளுள் 15 வயதான ஷமிமா பேகமும், கடிஜா சுல்தானாவும் பங்களாதேஷைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். மற்றொரு மாணவி பெயர் அமிரா அபாஸ். இவர்கள் லண்டனில் உள்ள பெத்னல் க்ரீன் அகாடாமியில் படித்து வந்தனர். ஒரு நாள், ’வெளியே சென்று வருகிறோம்’ என்று வீட்டில் கூறிவிட்டு சென்ற அவர்கள், பிறகு சிரியா சென்றுவிட்டனர். அப்போது இந்த செய்தி லண்டனில் பரபரப்பானது.

நான்கு வருடத்துக்குப் பிறகு, தற்போது சிரியாவின் அகதி முகாமில் இருக்கும் ஷமிமா பேகம், தான் நாடு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கும் அவர், தனது குழந்தைக்காக, எப்படியாவது லண்டன் திரும்பிவிடுவேன் என்றும் நம்பிக்கைத் தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘’நான்கு வருடத்துக்கு முன் விருப்பப்பட்டு இந்த அமைப்பில் சேர்ந்தோம். அதில் எனக்கு வருத்தம் இல்லை. வந்த 10 நாட்களில் இஸ்லாம் மதத்துக்கு மாறியிருந்த டச்சுக்காரரை திருமணம் செய்துகொண்டேன். அவர், ஐஎஸ் அமைப்பில் போரிட்டு வந்தார். எங்களுடன் வந்த சுல்தானா, குண்டு வீச்சில் உயிரிழந்து விட்டார்.

 எனக்கு இரண்டு குழந்தை பிறந்தது. இரண்டுமே இறந்துவிட்டன. இப்போது நிறைமாதக் கர்ப்பிணி யாக அகதி முகாமில் இருக்கிறேன். என் குழந்தையை வளர்ப்பதற்காகவாவது நான் லண்டன் திரும்ப வேண்டும்’’ என்றார். 

இந்நிலையில் ஷமிமா பேகம் இங்கிலாந்துக்குத் திரும்பக் கூடாது என்றும் அவரை அனுமதிக்க மாட்டோம் என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஷமிமாவின் அம்மா, பங்களாதேஷை சேர்ந்தவர் என்பதால், அவர் பங்களாதேஷ் செல்லலாம் என்று கூறப்பட்டது. 

இதை மறுத்துள்ள பங்களாதேஷ் வெளியுறத்துறை, ‘’ஷமிமா, பங்களாதேஷ் குடியுரிமை பெற்றவர் என்று தவறாக அடையாளம் காணப்பட்டி ருக்கிறார். அவர் இரட்டை குடியுரிமை கேட்டு எங்கள் நாட்டில் விண்ணப்பித்ததில்லை. எங்கள் நாட்டுக்கு அவர் வந்தது கூட இல்லை. அதனால் அவரை ஏற்கமாட்டோம். அதோடு, பயங்கரவாதத்தையும் அதற்கு ஆதரவளிப்பவர்களையும் எங்கள் நாடு ஒரு போதும் ஆதரிக்காது’’ என்று தெரி வித்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close