[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

கழிப்பறை காகிதத்தை தேடினால் வரும் பாகிஸ்தான் கொடி - புது சர்ச்சை

no-evidence-our-images-showed-pakistan-flag-for-toilet-paper-google

உலகின் சிறந்த கழிப்பறை பேப்பர் எது என்று தேடினால் பாகிஸ்தான் கொடி வருவது போல் கூகுள் தேடலில் மாற்றி அமைக்கப்படவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் குறித்த விமர்சனங்களும், மீம்ஸ்களும் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் உலகத்திலேயே சிறந்த கழிப்பறை பேப்பர் எது என்று கூகுளில் தேடினால், பாகிஸ்தான் கொடி காண்பிக்கப்படுவதற்கு கூகுள் தேடலில் சில ப்ரோகிராம்களை மாற்றியமைத்ததே காரணம் என சொல்லப்பட்டது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கு கூகுள் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்னை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருவதாகவும், இந்தப் படங்கள் சித்தரிக்கப்பட்டவை என்றும் கூகுள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close