[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

" நான் ஒரு பாகிஸ்தானி, புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்" பாகிஸ்தான் பெண்கள் 

pakistanis-post-pictures-on-facebook-condemning-kashmir-attack-launch-antihatechallenge

புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் பெண்கள் சமூக வலைதளங்களில் #AntiHateChallenge என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டு வருகின்றனர்

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு வழங்கிய வர்த்தக ரீதியிலான அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றது. 

காஷ்மீர் தாக்குதலால் தன் நெஞ்சில் தீ எரிந்துகொண்டு இருப்பதாகவும், தாக்குதலுக்கு எதிரிகள் நிச்சயம் பெரிய விலை கொடுக்க வேண்டுமென்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார். தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும் எனத் தெரிவித்தார். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே ஒருவித பதட்ட நிலையே நிலவி வருகிறது. 

இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் பெண்கள் சமூக வலைதளங்களில் #AntiHateChallenge என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டு வருகின்றனர். பாகிஸ்தான் பத்திரிகையாளரான ஷேய்ர் மிர்ஷா தொடங்கிய இந்த ஹேஸ்டேக் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட ஷேய்ர் மிர்ஷா, இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மனதளவில் தொந்தரவு செய்கிறது. தீவிரவாதத்துக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும். #AntiHateChallenge என்பது தாக்குதலுக்கான கண்டனம் மட்டுமல்ல, இது இந்திய நண்பர்களுக்கான ஆதரவு. இந்த பிரசாரத்தில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும். போர் எங்கு நடந்தாலும் அது உலக அமைதியை குலைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஷேய்ர் மிர்ஷாவின் #AntiHateChallenge ஹேஸ்டேக்குக்கு பல பெண்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நான் ஒரு பாகிஸ்தானி. நான் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என்று எழுதப்பட்ட பாதகைகளுடன் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close