[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிகவின் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்கள் கணிப்பைத்தான் பார்க்க வேண்டும்; கருத்துக்கணிப்பை முழுமையாக ஏற்க முடியாது - தம்பிதுரை
  • BREAKING-NEWS லண்டன் நீதிமன்றத்தில் வைர வியாபாரி நிரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி; இந்திய மதிப்பில் ரூ.4.50 கோடி பிணைத்தொகை செலுத்த தயாராக இருப்பதாக நிரவ் மோடி தரப்பு வாதம்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்து 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் தான் போட்டியில்லை என மாயாவதி அறிவிப்பு
  • BREAKING-NEWS அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது எந்த சட்டத்திலும் இல்லை- மதுரையில் ஒபிஎஸ் பேட்டி

ஆஸ்திரேலியாவில் பிரபலமான 2.0 படத்தின் மீம் !

australian-police-uses-2-0-meme

ரஜினி நடிப்பில் வெளியான 2.o திரைப்படத்தின் மீமை, ஆஸ்திரேலிய போலீசார் பயன்படுத்தி இருப்பது ட்விட்டரில் வைரலாக பேசப்பட்டு வருகிறது

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான எந்திரன் மற்றும் அதன் இரண்டாம் பாகமான 2.o திரைப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் பேசப்பட்டது. ஹாலிவுட் தரத்துக்கு இணையான கிராபிக்ஸ் காட்சிகள், மிரட்டும் விஷுவல் என அனைவரின் பாராட்டையும் பெற்றது. வழக்கம் போல் படத்தின் பல வசனங்கள் மீம்களாகவும், ஜிஃப் வீடியோக்களாகவும் சமூக வலைதளங்களில் வலம் வந்தன. அதிலும் முக்கியமாக  ''This is beyond science'' என்ற போட்டோ கமெண்ட் பிரபலமாக வலம் வந்தது. இந்நிலையில் அந்த போட்டோ கமெண்ட் தற்போது ஆஸ்திரேலியா காவல்துறை வரை சென்றுவிட்டது. 

சமீபத்தில் மேற்கு ஆஸ்திரேலியாவில் அந்நாட்டு காவல்துறை வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளது. அப்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வருபவர்களின் ஆல்ஹகாலின் அளவை சோதனை செய்துள்ளனர். அதில் ஒருவரின் ரத்தத்தில் 0.341% ஆல்ஹகால் இருப்பது தெரிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அவருக்கு அபராதம் விதித்த போலீசார் அது தொடர்பான ரசீதை தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஆச்சர்யமாக பகிர்ந்துள்ளனர். அந்த ட்வீட்டுக்கு போட்டோவாக ரஜினியின் 2.o திரைப்படத்தின் வசனத்தை பயன்படுத்தி இருப்பது தான் தற்போது வைரல். 

அந்த ட்வீட்டில் ''காலையில் ஓட்டுநர்களின் ஆல்ஹகால் அளவை சோதித்தோம். ஒருவருடைய ரத்தத்தில் 0.341% ஆல்ஹகால் இருந்தது. இது எப்படி சாத்தியம்? அந்த அளவு இருந்தால் அவர் கோமாவில் தான் இருக்க வேண்டும்’’ என்று நகைச்சுவையாக பகிர்ந்துள்ளனர்.

ஆஸ்திரேலிய போலீசாரின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள நம்ம ஊர் இணையவாசிகள் ரஜினிகாந்து உலக்குக்கே பொதுவானவர்கள் என்றும், ரஜினிகாந்த் எல்லைகளை கடந்தவர் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close