[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.59 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.59 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதற்கான அந்தஸ்தை இழந்தது பாகிஸ்தான் - அருண் ஜெட்லி

india-withdraws-mfn-status-to-pakistan

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதற்கு பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டுள்ள அனுகூலமான நாடு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என பாதுகாப்புதுறை விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் இந்தியாவையே கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது காஷ்மீர் தாக்குதல். காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்று 78 வாகனங்களில் ‌2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட  மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் பயணம் செய்தனர். அவர்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது.   

இதனைத் தொடர்ந்து பிரதமர் இல்லத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மூத்த மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ‌அருண் ஜெட்லி, தூதரகங்கள் மூலமாக பாகிஸ்தானை தனிமைப்படுத்த முயற்சிகளை வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொள்ளும் எனத் தெரிவித்தார். பாகிஸ்தானை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்த அனைத்து முயற்சிகளையும் வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொள்ளும் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி ஐநா சபையில் வலியுறுத்தப்படும் என்றும் காஷ்மீரில் முதல் கட்டமாக முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என அருண் ஜெட்லி தெரிவித்தார்.

இந்த அனுகூலமான நாடு அந்தஸ்த்து ரத்தாவதன் மூலம் பாகிஸ்தான் இந்தியாவுடன் எளிதில் வணிகம் செய்ய முடியாது. அதாவது பாகிஸ்தான் உடனான வணிகத்திற்கு இனிமேல் இந்தியா கட்டுபாடுகள் விதிக்கலாம். இந்த அந்தஸ்த்து உலக வர்த்தக மையத்தில் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாடுகளுக்கு கொடுக்கப்படுகின்றன. இந்தியா பாகிஸ்தானுக்கு இந்த அந்தஸ்த்தை கடந்த 1996 ஆம் ஆண்டு வழங்கியது. ஆனால் பாகிஸ்தான் இதுவரை இந்தியாவிற்கு இந்த அந்தஸ்த்தை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close