[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு செல்வதை தவிர்க்கவும்: அமெரிக்கா

us-administration-advises-its-citizens-not-to-travel-to-pakistan

பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் பெருகி வருவதால், அந்நாட்டுக்கு செல்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் என ட்ரம்ப் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகள் அங்கு பல்வேறு சதித் திட்டங்களை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளது. எனவே அந்நாட்டுக்கு செல்லும் முடிவை அமெரிக்கர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க விமான போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. 

குறிப்பாக பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துங்வா மாகாணங்களுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும், பயங்கரவாத சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அ‌ங்கு செல்வதையும் அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், ஷாப்பிங் மால்கள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் வழிப்பாட்டுத் தலங்களுக்கு பயங்கரவாதிகள் குறி வைத்திருப்பதாகவும் அமெரிக்க விமான போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close