[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

பெற்றோரை நினைத்து கண்ணீர் வடிக்க வைக்கும் ஆன்லைன் கேம் - இது சீனா வைரல்!

this-hit-chinese-game-moving-players-to-tears

சீனாவில் 'சைனீஸ் பேரண்ட்ஸ்' என்ற ஆன்லைன் விளையாட்டு அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

சைனீஸ் பேரண்ட்ஸ் விளையாட்டு பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயான உறவை புரிந்துகொள்ள உதவுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்மார்ட்போனின் வருகைக்குப் பிறகு அதன் பயன்பாடு பல வகைகளில் உள்ளது. பேசுவதற்கு மட்டும்தான் செல்போன் என்பதை தாண்டி சமூக வலைத்தளம், கேம்ஸ், இதர செயலிகள் என செல்போனில் உள்ளவை ஏராளம். குறிப்பாக கேம்ஸ் என்பது பொழுதுபோக்கு என்ற அம்சத்தை தாண்டி அது தற்போது பலரையும் அடிமைப்படுத்தும் அளவுக்கு சென்றுள்ளது. 

செல்போன் கேம்ஸ், செயலிகளையும் அரசாங்கம் கவனித்து தடை செய்யும் அளவுக்கு இந்த மாதிரியான செயலிகளின் வீரியம் வளர்ந்துள்ளது. சில கேம்ஸ், விளையாடுபவர்களை தற்கொலைக்கு தூண்டிய விபரீதமும் அரங்கேறியுள்ளதை நாம் அறிவோம். இப்படி ஆன்லைன் கேம்ஸுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீனாவில் ஒரு குறிப்பிட்ட விளையாட்டிற்கு பல தரப்பிடமிருந்து வரவேற்பு அதிகரித்துள்ளது. ‘சைனீஸ் பேரண்ட்ஸ்’ என்ற அந்த ஆன்லைன் விளையாட்டு அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறது.

இந்த விளையாட்டின் மையக் கரு, ஒரு குழந்தையை தொட்டில் முதல் கல்லூரி வரை வளர்த்து எடுக்க வேண்டும். அதாவது ஒரு கைக்குழந்தை உங்கள் கைகளில் கொடுக்கப்படும். அதனை வளர்த்து கல்லூரியில் சேர்ப்பது வரை உங்கள் டாஸ்க். 48 சுற்றுகளை கொண்ட இந்த விளையாட்டில் குழந்தையின் பள்ளிகளை தேர்ந்தெடுப்பது, பியானோ வகுப்புக்கு அனுப்புவது, நீச்சல் வகுப்புக்கு அனுப்பவது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள்கூட இதில் இடம் அடங்கும். 

ஆக, உங்கள் எண்ணத்திற்கேற்ப இந்த விளையாட்டில் குழந்தைகளை நீங்கள் வளர்ப்பீர்கள். அப்போது குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும்? அவர்களின் உடல்நிலை எப்படி இருக்கும்? என்பதெல்லாம் இந்த விளையாட்டின் வெற்றிப் புள்ளிகளாக எடுத்து கொள்ளப்படும். அதற்கு ஏற்ப நீங்கள் அடுத்தடுத்த சுற்றுக்கு செல்ல முடியும். இந்த விளையாட்டில் நீங்கள் உங்களை பெற்றோராகவோ, குழந்தைகளாகவோ தேர்ந்தெடுத்துக்கொண்டு விளையாடலாம்.

இது குறித்து விளையாட்டை உருவாக்கிய யாங் ஜி இல்லாங் பேசியபோது, ''சைனீஸ் பேரண்ட்ஸ் விளையாட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த விளையாட்டு, பெற்றோரை நினைத்து கண்கலங்கவும் செய்துவிட்டது என்று பலரும் நெகிழ்ச்சியாக என்னிடம் கூறுகின்றனர்'' என்று தெரிவித்துள்ளார்.

விளையாட்டு குறித்து பேசிய 19 வயதான இளைஞர் காங் செங்கோ, ''இதை விளையாடிய பிறகே என் பெற்றோரின் அருமை புரிகிறது. அவர்கள் எனக்காக எவ்வளவு உழைக்கிறார்கள் என்பது தெரிகிறது. அவர்களை நான் புரிந்துகொள்ள தொடங்கியிருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

குழந்தை வளர்ப்பின் ஆரம்ப நிலையிலிருந்து இந்த விளையாட்டு இருப்பதால் குழந்தைகளை பற்றி பெற்றோரும், பெற்றோர்கள் குறித்து குழந்தைகளும் புரிந்து கொள்ள முடிகிறது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close