[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

மலைப்பாம்பை விட்டு கைதியை கொடூரமாக விசாரித்த போலீஸ் : வீடியோ

police-interrogation-with-python-in-indonesia

இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணத்தில் பிரபல கைதி ஒருவரிடம் போலீசார் கொடூரமான முறையில் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் கைதியின் கை கால்களை கட்டி அவரது கழுத்தில் மலை பாம்பை விட்டு அச்சுறுத்தி விசாரணை மேற்கொண்டனர். மேலும் அதனை வீடியோவாக படம் பிடித்து சமூக வளைத்தளத்தில் பதிவிடபட்டதால்,அது உலகம் முழுவதும் பரவாலாக பகிரப்பட்ட வருகிறது.

Image result for மலைப்பாம்பு

அந்த வீடியோவில் கைதி செல்போன் திருடியுள்ளதால், அவரை கைது செய்து கை கால்களை கட்டி அவரது கழுத்தில் மலை பாம்பை சுற்றி வைத்து அவரை கடிக்க வைக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் அவர் பயந்து அலறினார். பின்பு போலீசார் அவரிடத்தில் சில கேள்விகளை கேட்க, அதற்கு அவர் பதிலளித்தார். இவ்வாறான விசாரணை அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதற்கு கண்டணம் தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் இது மனித உரிமை மீறல் எனக் கூறியுள்ளனர்.

Image result for phone thief during a police interrogation in the Indonesian province of Papua.

இந்நிலையில் இச்சம்பவத்திற்கு இந்தோனேசிய காவல்துறை தனது வருத்தத்தைத் தெரிவித்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது. மேலும் இனவெறியுடன் இந்தத் தண்டனை அளிக்கப்பட்டிருப்பதாகவும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இம்மாதிரியான கொடூரமான முறையில் விசாரணை நடத்துவது முதல்முறையல்ல எனவும் ஏற்கெனவே சில கைதிகளை இது போன்று விசாரணை செய்துள்ளனர் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close