[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றமற்றவர்களென வாதிட்ட இந்தியர்கள்..!

129-indian-students-have-been-arrested-in-the-us

விசா மோசடி செய்ததாகக்கூறி கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்கள் தாங்கள் குற்றவாளி இல்லை என நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர்.

விசா மோசடி செய்ததாகக் கூறி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 பேர் அமெரிக்காவிலுள்ள பல்வேறு நகரங்களில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மெக்ஸிகன் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அமெரிக்க மாவட்ட நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. 

மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து டெட்ராய்ட் பகுதியில் இருந்த 6 இந்தியர்கள், ஃப்ளோரிடா மற்றும் வெர்ஜீனியாவில் இருந்து தலா ஒருவரும் கைது செய்யப்பட்டனர். 

2017 பிப்ரவரி தொடங்கி, 2019 ஜனவரி வரையிலான காலகட்டத்தில, போலி பல்கலை க‌ழகம் மூலம் மாணவர்கள் என்ற பெயரில் முறைகேடு செய்ததாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இந்தியர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தாங்கள் குற்றவாளி இல்லை என வாதிட்டுள்ளனர். ஆனால், குற்றஞ்சாட்டப்பட்ட 130 பேரும் தங்கள் குற்றத்தை அறிந்தே இந்தத் தவறை செய்ததாகவும், இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close