[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

வட கொரியா ஏவுகணைச் சோதனை தோல்வி: தென் கொரியா தகவல்

north-koriya-missile-test-fail-south-koriya

வடகொரியா புதிய ஏவுகணை சோதனை தோல்வியடைந்துள்ளதாக தென் கொரிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட கொரியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள அதிகாரிகள், ஏவுகணை எத்தகையது என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏ‌ற்கெனவே மூன்று முறை தோல்வியடைந்த முசுடன் ரக ஏவுகணையே மீண்டும் பரிசோதிக்கப்பட்டிருக்கலாம் என யோன்ஹப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்தகைய ரக ஏவுகணையானது வட கொரியாவில் இருந்து ஜப்பான் மற்றும் குவாம் தீவு வரை சென்று தாக்க வல்லதாகக் கூறப்படுகிறது. வட கொரியாவின் இந்த நடவடிக்கையை அடுத்து ஜப்பான் தன்னுடைய கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close