[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

தமிழுக்கு பெருமை! அமெரிக்காவில் தமிழ்ப் பண்பாட்டு மாதமாக ஜனவரி அறிவிப்பு!

roy-cooper-proclaim-january-as-tamil-language-and-culture-month

நடப்பு ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலம் அறிவித்துள்ளது. 

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள தமிழ்ச்சங்கம் இந்த மாதமான ஜனவரியை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுள்ள கரோலினா மாநில அரசு நடப்பு ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவித்துள்ளது. இதற்கான ஆணையை மாநில ஆளுநர் ராய் கூப்பர் வெளியிட்டுள்ளார். 

உலகில் நெடுங்காலமாகப் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வரும் பெருமையைக் கொண்ட மொழிகளுள் ஒன்று தமிழ் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு கரோலினா மாநிலத்தின் வளர்ச்சியில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருப்பதாக அந்த அறிவிப்பில் ராய் கூப்பர் தெரிவித்துள்ளார். 

மேலும் இது குறித்த வீடியோ பதிவு ஒன்றையும் ராய் கூப்பர் வெளியிட்டுள்ளார். அதில்,  தமிழர்களின் அடையாளம் தமிழ் மொழி. உலகில் இன்னும் பயன்பாட்டில் இருக்கும் பழமையான மொழிகளில் ஒன்றும் கூட. வடக்கு கரோலினாவில் வசிக்கும் தமிழர்கள் சிறப்பு மிக்க தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் இங்கு பாதுகாத்து வளர்த்துள்ளனர். தமிழ் மொழியும் நமது கலாச்சார வரலாற்று வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. அதன்படி தமிழர்களோடு இணைந்து தைப் பொங்கலை கொண்டாடுவதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close