[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

தேர்தல் பரப்புரையை தொடங்கினார் கமலா ஹாரிஸ் !

kamala-harris-officially-launches-2020-presidential-campaign

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள இந்திய வம்சாவளி ‌அமெரிக்கரான கமலா ஹாரிஸ்  பரப்புரையை தொடங்கியுள்ளார்.

2020-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட இருக்கிறார். குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் 4-வது பெண் என்ற வகையில் மக்களை கவரும் வகையில் உணர்ச்சி பூர்வமாக தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியிருக்கிறார்.

Related image

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தனது சொந்த ஊரான ஆக்லாந்தில் தேர்தல் பரப்புரையை தொடர்ந்த கமலா ஹாரிஸ், தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக தொண்டாற்ற முடிவு செய்திருப்பதாக உணர்ச்சிபூர்வமாக பேசினார். ஒரே இடத்தில் அமர்ந்து சூழல்கள் பற்றி புறம்பேசுவதை விட, செயலில் இறங்குவது தான் சிறந்ததாக இருக்கும் என தனது தாயார் கூறியதாக கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.

Image result for kamala harris

பிரச்னைகளுக்கு எதிராக போராடும் குணம் தனது தாயிடம் இருந்தே தமக்கு கிடைத்ததாக கூறிய கமலா ஹாரிஸ், அமெரிக்காவை அதிகம் நேசிப்பதால் தான், அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததாக கூறினார். ட்ரம்பின் வெளியுறவு கொள்கைகளை அதிகம் விமர்சித்த கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் ஜனநாயகத்தின் மீது‌ முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close