[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி

பிரேசில் அணை விபத்து : பலி எண்ணிக்கை 58 ஆக அதிகரிப்பு

brazil-dam-collapse-the-number-of-death-is-increase

பிரேசிலில் இரும்பு தாது சுரங்கம் அருகே இருந்த அணை உடைந்த விபத்தில், சகதியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.

பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புமாடின்கோ நகரம் அருகே மினாஸ் கெராய்ஸ் என்ற இரும்புத்தாது சுரங்கம் உள்ளது. அந்நாட்டின் மிகப்பெரிய‌ சுரங்க நிறுவனமான வாலே, என்ற நிறுவனம் இந்த சுரங்கத்தை நிர்வகித்து வருகிறது. இதன் அருகில் இருக்கும் அணைக்கட்டு பராமரிப்பையும் வாலே நிறுவனமே கவனித்து வருகிறது. 

Image result for BRAZIL DAM DEATH

இந்நிலையில், அணைக்கட்டில் ஏற்பட்ட விரிசல் பெரிதாகி, அணையின் ஒரு பகுதி உடைந்ததில், ஊருக்குள் சேரும், சகதியுமான வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். மேலும் அணையின் வளாகத்தில் இருந்த உணவகமும் வெள்ளத்தில் சிக்கி புதைந்தது. அணையை ஒட்டியிருந்த நிறுவனங்கள்‌, தொழிலாளர்கள் வசித்த குடியிருப்பு பகுதிகளும் சகதியில் புதைந்தது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related image

இந்த விபத்துக்குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் சகதியில் சிக்கிய தொழிலாளர்களை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர். அருகிலிருக்கும் மற்றொரு அணையும் மோசமான நிலையில் இருப்பதால் அப்பகுதியிலிருக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

Related image

இதுவரை ‌58 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 300க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காணாமல் போனவர்களில் பெரும்பாலனவர்கள் சகதியில் புதைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தச் சோக சம்பவத்தை தொடர்ந்து பிரேசில் அரசு சார்பில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close