[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

செல்போன் பாஸ்வேர்டை தர மறுத்த கணவன் ! தீ வைத்து எரித்த மனைவி

wife-burns-husband-alive-after-he-denies-sharing-mobile-passcode

செல்போன் பாஸ்வேர்டை தர மறுத்த கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் டெடி புர்ணமா. அவரது மனைவி இல்ஹாம். சம்பவத்தன்று புர்ணமா தன் வீட்டு கூரையின் ஓடுகளை சரிசெய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரிடம் இல்ஹாம் செல்போன் பாஸ்வேர்டை  கேட்டுள்ளார். அதனை புர்ணமா தர மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே தன் கணவனை உயிருடன் எரித்துள்ளார் இல்ஹாம். 

முகத்தின் சில இடங்களிலும் உடலில் பல இடங்களிலும் கடுமையான தீக்காயம் ஏற்பட்டதால் புர்ணமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இரண்டு நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தற்போது அவரது மனைவி இல்ஹாம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள அந்நாட்டு செய்தி நிறுவனம், பாட்டிலில் இருந்த பெட்ரோலை கணவர் மீது ஊற்றி லைட்டர் மூலம் மனைவி தீ வைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து பேசிய காவல்துறை,  இது செல்போன் பாஸ்வேர்டுக்காக மட்டுமே நடந்ததாக தெரியவில்லை. கணவன் அடிக்கடி மனைவியிடம் சண்டையிட்டு அவரை துன்புறுத்தியதாக தெரிகிறது. அதன் உச்சகட்டமாகவே இந்த கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனாலும் கொலை தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்துகிறோம் என்று தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close