[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

பழசை கிளறும் 10 இயர் சேலஞ்ச் ஹேஸ்டேக்!

10-year-challenge-is-the-social-media-s-latest-viral-movement

சமூக வலைதளங்களில் 10 இயர் சேலஞ்ச் (#10yearchallenge) என்ற ஹேஸ்டேக் பிரபலமாகி வருகிறது

சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஏதாவது சேலஞ்ச் ஹேஸ்டேக்கை உருவாக்கி அது குறித்து வீடியோ வெளியிடுவது வழக்கமாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய கிகி சேலஞ்ச் பிரபலமானது. ஓடும் காரில் இருந்து கீழே இறங்கி நடனமாடியபடியே முன்னேற வேண்டும். இதனை ஆடிய பலரும் அதனை வீடியோவாக தங்களது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இந்த நடனத்தால் உலகெங்கிலும் பல விபத்துகள் ஏற்பட்டன. 

அதேபோல் ‘நில்லு நில்லு சேலஞ்ச்’ பிரபலமானது. ஓடும் வாகனத்தின் முன் நின்று நடனம் ஆடுவது இந்த சேலஞ்சாக கூறப்பட்டது. இதுவும் சில இடங்களில் விபத்துக்கு வழிவகுத்தது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் 10 இயர் சேலஞ்ச் (#10yearchallenge) என்ற ஹேஸ்டேக் பிரபலமாகி வருகிறது. அதன்படி 2009ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இணைத்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் தங்கள் நண்பர்களையும் டேக் செய்து அவர்களையும் சேலஞ்சில் பங்கேற்க அழைப்பு விடுத்து வருகின்றனர். 

உலகெங்கிலும் பலரும் இந்த ஹேஸ்டேக்கில் தங்களின் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். சினிமா பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும் இந்த சேலஞ்சை ஏற்று புகைப்படத்தை பதிவிட சமூக வலைதளங்களில் 10 இயர் சேலஞ்ச் (#10yearchallenge) வைரலாகி உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close