[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை

scientist-eaten-alive-by-crocodile

பெண் ஆராய்ச்சியாளரை முதலை ஒன்று உயிருடன் விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனிசியாவின் சுலவேசி பகுதியில் அறிவியல் ஆராய்ச்சி நிலையம் ஒன்று உள்ளது. இங்கு 17 அடி முதலை ஒன்று அதற்கான இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த முதலைக்கு பெண் ஆராய்ச்சியாரான டேசி டூவோ உணவு கொடுக்க முயன்றிருக்கிறார். அப்போது 8 அடி தூரம் தாவிக் குதித்த அந்த முதலை டேசியை அப்படியே தரதரவென அதன் இடத்திற்கு வாயால் இழுத்துள்ளது. பின்னர் டேசியை உயிருடன் அப்படியே முழுங்கியதாக கூறப்படுகிறது.

டேசி, முதலையின் வாயில் பாதி உள்ளே சென்ற நிலையில் அதனை டேசியின் தோழி கண்டிருக்கிறார். இருப்பினும் முதலையின் வாயில் இருந்து டேசியை மீட்க முடியவில்லை. இதனிடையே டேசிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதாவது இவ்வளவு அருகிலா செல்வது..? விலங்குகளிடம் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டுமா என தங்களை கருத்துகளை தெரிவித்துள்ளனர். சிலரோ இவ்வளவு தூரம் முதலை தாவுமா..? வேறு ஏதேனும் சம்பவங்கள் நடந்துவிட்டதாக என கேள்வி எழுப்புகின்றனர்.

ஆராய்ச்சியாளரை விழுங்கிய முதலைக்கு விரைவில் சோதனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே முதலையை துன்புறுத்தல் செய்யக் கூடாது என்ற கருத்துகளும் நிலவுகின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close