[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

மோடிக்கு 'பிலிப் கோட்லர்' விருது - விமர்சனம் செய்த ராகுல்காந்தி

rahul-gandhi-congratulates-pm-modi-for-award-so-famous-it-has-no-jury

பிரதமர் மோடி, கோட்லர் விருது பெற்றிருப்பதை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

அமெரிக்க பொருளாதார எழுத்தாளரான பிலிப் கோட்லரின் பெயரில் நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிவகுப்பவர்‌‌கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் மேம்பாடு, பொருளாதாரம், சமூகம் மற்றும் தொழிநுட்ப முன்னேற்றத்துக்காக உலக அளவில் இந்தியாவை முன்னேற்றியவர் என்ற அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிலிப் கோட்லர் விருது வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் இந்த விருதை பிரதமர் மோடி பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் பிரதமர் மோடி கோட்லர் விருது பெற்றிருப்பதை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். அதில் இதற்கு முன் எவருக்கும் தரப்பட்டிராத, எந்த ஒரு தேர்வுக் குழுவாலும் தேர்வு செய்யப்படாத ஒரு விருதை பெற்றிருக்கும் மோடியை பாராட்ட விரும்புவதாக ராகுல் காந்தி தன் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அந்த விருதின் பின்னணியில் இதற்கு முன் கேள்வியே பட்டிராத உத்தரப்பிரதேச மாநில நிறுவனம் ஒனறு உள்ளதாகவும் ராகுல் காந்தி தனது பதிவில் விமர்சித்துள்ளார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close