[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

‘நான் ஈ’ பட பாணியில் தேனீக்குள் ரோபோவை பொருத்தி சாதனை

robot-with-bees-could-use-to-conduct-research-on-agriculture

தாவரங்களின் வளர்ச்சி, மண்வளம், ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் விவசாயம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக தேனீக்குள் ஒரு ரோபோவை பொருத்தி சாதனைப்படைத்துள்ளனர்.

நான் ஈ படத்தில் 'ஈ'க்கு பிரத்யேகமாக கூலிங் கிளாஸ், உடை, மாஸ்க் போன்றவை அணிவிக்கப்பட்டிருக்கும். அதேபோன்று வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் கணினி அறிவியல் மாணவரான விக்ரம் ஐயர் என்பவர் தேனீக்களின் முதுகில் மிகச்சிறிய ரோபோ ஒன்றை பொருத்தி புதிய முயற்சியை கையாண்டு வருகிறார்

நுண்ணறிவு வல்லுநரான விக்ரம், பிரத்யேகமாக வடிவமைத்த ஜிபிஎஸ் கருவிகள் தேனீ'க்களின் முதுகில் பொருத்தப்படுகிறது. அந்தத் தேனீக்கள் தாவரங்களின் மீதோ அல்லது மலர்களின் மீதோ அமரும்போது அந்தத் தாவரங்களின் வளர்ச்சி, தாவரங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் அம்சங்கள், அப்பகுதியில் நிலவும் வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் போன்ற தகவல்களை சேகரிக்க முடியும். தேனீயின் முதுகில் ஒரு பையும் இருக்கிறது. அந்தப் பையில் ஒரு சிறிய மின் தூண்டி சர்க்யூட் போர்டு, சிறிய ஆண்டெனா கம்பி, தரவு டிரான்ஸ்மிட்டர், பேட்டரி, ஜி.பி.எஸ் போன்றவை இடம்பெற்றுள்ளன.

நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிக துல்லியமாக உருவாக்கப்பட்ட இந்த இயந்திரங்கள் அனைத்தும் வெறும் 102 மில்லி கிராம் எடையை கொண்டது. அதாவது 7 அரிசியின் எடைதான் என்கிறார் விக்ரம். தேனீ வெவ்வேறு இடங்களுக்கு செல்லும்போது அந்த இடத்திலுள்ள வெப்பநிலை, வானிலை, ஈரப்பதம் போன்றவை கணக்கிடப்பட்டு சென்சார் மூலம் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. தாவரங்களை தாக்கும் நோய்கள், என்ன வகையான பூச்சுக்கொல்லிகள் தெளிக்கப்‌பட்டுள்ளன, தாவரங்களின் நோய் தாக்குதல் ஏற்படுவதற்கான காரணங்கள் போன்றவை இதன் மூலம் சேகரிக்க முடியும் என்கிறார் விக்ரம்.

விவசாயத்துறையில் தொழில்நுட்பத்தை புகுத்தி சாதனைப்படைத்தாலும் தேனீக்குள் வைக்கப்பட்ட அந்த ரோபோவை மீண்டும் தேனீயிடமிருந்து மீட்பது சவாலான விஷயம் என விக்ரம் சற்றே கவலைப்படுகிறார். தாவரங்களுக்கு நடுவில் தேனீ சிக்கிக்கொண்டால் ரோபோக்களின் தொடர்பு துண்டிப்பதுடன் பழுதடைந்துவிடுவதால் முயற்சி தோல்வியடைவதே கவலைக்கு காரணம் என்றும் விக்ரம் கூறுகிறார்.

குறிப்பிட்ட தொலைவை விட நீண்ட தூரம் சென்றுவிட்டால் ரோபோவிடமிருந்து சிக்னல் கிடைப்பதும் இந்தத் தொழில்நுட்பத்தில் இருக்கும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. படிப்படியான ஆய்வுகளுக்குப் பின் இந்தப் பின்னடைவுகள் நிச்சயம் சரி செய்யப்படும் என்றும், இதன் மூலம் வருங்காலத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் வேளாண் தொழிலும் கொடிக்கட்டி பறக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close