[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

சவுதி பெண்ணை நாடுகடத்தும் முடிவை கைவிட்டது தாய்லாந்து!

we-will-protect-her-thailand-halts-plan-to-expel-saudi-teen

ஆஸ்திரேலியா செல்வதற்காக வந்த சவுதி இளம் பெண்ணை, அந்நாட்டுக்கு நாடுகடத்தும் முடிவை தாய்லாந்து அதிகாரிகள் கைவிட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் ரஹஃப் முகமது அல்குனம் (Rahaf Mohammed al-Qunun). வயது 18. குடும்பத்தினர் இவருக்கு திருமண ஏற்பாடு செய்தார்களாம். மறுத்தார் ரஹஃப். இதையடுத்து அவரை அறைக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்தார்களாம். தலைமுடியை வெட்டி, அடித்து துன்புறுத்தியுள்ளனர். வீட்டில் இருந்து தப்பிக்க சரியான நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் குடும்பத்துடன் குவைத் சென்றிருந்த அவர், அங்கிருந்து தப்பி, ஆஸ்திரேலியா செல்ல முயன்றார். முதலில் தாய்லாந்து சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல அவர் முடிவு செய்திருந்தார். 

ஆனால், பாஸ்போர்ட்டை பரிசோதித்த குவைத் குடியுரிமை அதிகாரிகள், அதை பறிமுதல் செய்தனர். பெற்றோர் அனுமதி இல்லாமல், வெளிநாடு அனுப்ப மறுத்துவிட்டனர். இதுகுறித்து ஐ.நா.மனித உரிமை கண்கணிப்பு ஆணையத்துக்கு ரஹஃப், ட்விட்டரில் தகவல் தெரி வித்தார். பின்னர் எப்படியோ சமாளித்து விமானத்துக்குள் ஏறிவிட்டார். 

விமானம் தாய்லாந்து வந்தது. அவது பாஸ்போர்ட்டை சோதித்த குடியுரிமை அதிகாரிகள், ஆஸ்திரேலியாவில் தங்குவதற்கான விசா உள்ளிட் ட ஆவணங்கள் இல்லாததை அடுத்து அவரை அனுப்ப மறுத்தனர். சவுதி தூதரகத்திடம் இதுபற்றி கூறினர். 

ரஹஃப் வீட்டில் இருந்து தப்பி வந்ததும் ஆஸ்திரேலியாவில் அகதியாக தஞ்சம் கோர இருப்பதும் அப்போதுதான் அவர்களுக்குத் தெரியவந்தது. ஆனால், அவரை ஆஸ்திரேலியா அனுப்ப தாய்லாந்து இமிகிரேஷன் அதிகாரிகள் மறுத்து விட்டனர். சவுதிக்கு திரும்ப அனுப்பப்போகிறோம் என்றனர்.

இதை ஏற்க மறுத்த ரஹஃப், ’’நான் இஸ்லாம் மதத்தை துறந்துவிட்டேன். சவுதி சென்றதும் என்னை சிறையில் அடைப்பார்கள். அங்கிருந்து வெளியே வந்ததும் என்னைக் கொன்று விடுவார்கள்’’ என்று கதறினார். ’’நூறு சதவிகிதம், என்னை அவர்கள் கொல்வது உறுதி, தயவு செய்து என்னை அங்கு அனுப்பாதீர்கள்’’ என்று கண்ணீர் விட்டார். இருந்தும் தாய்லாந்து அதிகாரிகள் அவரை சவுதிக்கு நாடு கடத்தும் முடிவில் உறுதியாக இருந்தனர். இதுபற்றி மனித உரிமை கண்காணிப்பு அமைப்புக்கு ரஹப், உருக்கமாக ட்விட் செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் ஆணையத்திடம் தாய்லாந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள், ரஹஃப்பை ஏற்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து ரஹஃபை நாடு கடத்தும் முடிவை தாய்லாந்து அதிகாரிகள் கைவிட்டனர். அவரை ஓட்டல் ஒன்றில் தற்காலிகமாகத் தங்கவைத்துள்ளனர். 

முன்னதாக, இரண்டு வருடங்களுக்கு முன், சவுதியை விட்டு தப்பி வந்த டினா அலி லஸ்லும் என்ற பெண்ணை, கடும் எதிர்ப்புக்கு இடையே, பிலிப்பைன்ஸ் நாடு மீண்டும் சவுதியிடமே திருப்பி அனுப்பியது. ஆனால் அவர் நிலைமை என்னவானது என்பது தெரியவில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close