[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை

காதலிக்காக பட்டத்தை துறந்தார் மலேசிய மன்னர்!

malaysia-king-quits-amid-talks-of-marriage-to-russian-beauty-queen

மலேசிய மன்னர், 5-வது சுல்தான் முகமது தனது காதலிக்காக, பட்டத்தை துறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மலேசியாவில் மன்னரின் முடியாட்சியின் கீழ் கூட்டாட்சி முறையிலான ஆட்சி அமலில் உள்ளது. அந்நாட்டின் 15-ஆம் மன்னராக  சுல்தான் முகமது (49) 2016 ஆம் ஆண்டு பட்டம் ஏற்றார். அவர் தலைமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மகாதீர் பின் முகமது அந்நாட்டின் ஆட்சியை நடத்தி வருகிறார். 

Read Also -> ’என்னை கொன்று விடுவார்கள், தயவு செய்து காப்பாற்றுங்கள்’: தாய்லாந்தில் கதறிய சவுதி பெண்! 

உடல் நலக்குறைவு காரணாக, சிகிச்சை மேற்கொள்வதாக கூறி மன்னர், அரச பணிகளை கவனிக்காமல் இருந்து வந்தார். ரஷியாவை சேர்ந்த ‘மிஸ்.மாஸ்கோ’ பட்டம் பெற்ற ஓக்சானா வோயவோடினா என்ற இளம்பெண்ணை அவர், காதலித்து கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டதாக செய்திகளும் புகைப்படங்களும் வெளியாகின. இதுபற்றி அதிகாரப்பூர்வமாக மன்னர் தரப்பு அறிவிக்கவில்லை.

Read Also -> ஜனவரியில் தொடங்குகிறது ‘தளபதி 63’ படப்பிடிப்பு?  

இதற்கிடையே இந்த காதல் திருமணம் காரணமாக, அவர் மன்னர் படத்தைத் துறப்பார் என்று மலேசியாவில் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் நேற்று தனது மன்னர் பட்டத்தைத் துறந்துள்ளார். இதை மலேசியா நாட்டு மன்னர் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அவர து பதவி விலகலுக்கான காரணம் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. 

Read Also -> அதிகாரத்தால் அலட்சியப்போக்கு காட்டுகிறதா தேர்தல் ஆணையம் ?

(மன்னரின் அரண்மனை)

பிரிட்டனிடம் இருந்து 1957 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது முதல் மலேசியாவில் மன்னர் ஒருவர் முடி துறப்பது இதுதான் முதல் முறை. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close