[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

யோகாவை விரும்பும் சீனர்கள் : மோடியின் சீன பயண எதிரொலி

china-s-first-yoga-college-in-yunnan-is-good-reach-for-collage

பிரதமர் நரேந்திர மோடியின் சீன பயணத்தின் எதிரொலியாக சீனாவின் யுனான் மாகாணத்தில் செயல்பட்டு வரும் யோகா கல்லூரிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தியா - சீனா நட்புறவை பிரதிபலிக்கும் வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதன் முதலாக குன்மிங் நகரில் முதல் யோகா கல்லூரி தொடங்கப்பட்டது. அந்த கல்லூரிக்கு இந்தியாவின் சார்பில் யோகா கற்றுக்கொடுக்க ஒரு ஆசிரியரும் நியமிக்கப்பட்டார். இந்த யோகா கல்லூரிக்கு சீன மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சீனாவில் கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு யோகா கற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 

Image result for Yunnan Yoga College

பிரதமர் நரேந்திர மோடியின் சீன பயணத்தை தொடர்ந்து தொடங்கப்பட்ட இந்த யோகா கல்லூரி தற்போது சீனாவின் மேலும் 50 மாகாணங்களுக்கு விரிவுப்படுத்தப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்தியாவைத் தொடர்ந்து சீனாவில்தான் அதிக எண்ணிக்கையிலான மக்கள் யோகா செய்ய விரும்புவதாக சொல்லப்படுகிறது.

Related image

இந்நிலையில் ஹட யோகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கல்லூரியில் மூன்றாண்டு யோகா பாடம் கற்பிக்கப்படுகிறது. மேலும் யோகாவுக்கான சான்றிதழ் படிப்புகளும் இந்த கல்லூரியில் பயிற்றுவிக்கப்படுகிறது. யோகா செய்வது மன அழுத்தத்தை குறைப்பதாகவும் இதனால் படிப்பு உள்ளிட்ட விஷயங்களில் முழுமையாக கவனம் செலுத்த முடிவதாகவும் இங்கு யோகா பயிலும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மாணவர்களை தவிர அவர்களது பெற்றோர்களும், மற்ற பொதுமக்களும் கூட யோகா கற்றுக்கொள்ள இந்த கல்லூரிக்கு வருவதாக ஆசிரியர் சுப்புலஷ்மி தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close