[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

உயிரை பணயம் வைத்து நாய்க்குட்டியை காப்பாற்றிய போலீஸ்: வீடியோ  

turkish-policeman-risks-his-life-to-save-a-dog

துருக்கியில் உறைந்த ஏரிக்குள் சிக்கிய நாய்க்குட்டியை தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கிழக்கு துருக்கியில் உள்ளது வேன் ஏரி. இந்த ஏரி கடும் பனிப்பொழிவு காரணமாக உறைந்து பனிக்கட்டியாகவே உருமாறியுள்ளது. இந்நிலையில் அந்த ஏரியில் ஒரு நாய்க்குட்டி ஒன்று சிக்கி தவித்துள்ளது. ஏரி முழுவதும் உறைந்துவிட்டால் அந்த நாய்க்குட்டியால் நகரக்கூட முடியவில்லை. ஒரு பெரிய ஐஸ்கட்டிக்குள் சிக்கிய அந்த நாய்க்குட்டி குளிரால் உறைய தொடங்கியது. நாய்க்குட்டியைக் கண்ட துருக்கி போலீசாரான புராக் ஓக்டேன், தன் உயிரையும் பணயம் வைத்து அந்த நாய்க்குட்டியை காப்பாற்றியுள்ளார்.

தன்னுடைய கைகளால் பனிபாறைகளை உடைத்த ஓக்டேன், நடுங்கும் குளிரில் நாய்க்குட்டியை காப்பாற்றி கரை சேர்ந்துள்ளார். அங்கு தயாராக இருந்த கால்நடை மருத்துவர்கள் குளிரில் உறைந்த நாய்க்குட்டிக்கு முதலுதவி கொடுத்து மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று கிசிச்சை அளித்தனர். தொடர் சிகிச்சை காரணமாக அந்த நாய்க்குட்டி உயிர் பிழைத்துள்ளது. 

போலீசார் ஓக்டேன், நாய்க்குட்டியை காப்பாற்றியது மட்டுமல்லாமல் அந்த நாய்க்குட்டியை தத்தெடுத்து அதற்கு 'பிஸ்' என்றும் பெயரிட்டுள்ளார். தனது உயிரையும் பொருட்படுத்தாமல் நாய்க்குட்டியை காப்பாற்றிய போலீசாரின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து பேசிய போலீசார் ஓக்டேன், ''கடைசி தருணத்தில் நான் அந்த அரிய செயலை செய்து முடித்தேன்'' என்று தெரிவித்துள்ளார்.


வீடியோ:

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close