[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

“2018ல் மட்டும் 94 நிருபர்கள் படுகொலை” - சர்வதேச சம்மேளனம் கவலை

94-journalists-have-been-murdered-around-the-world-in-2018

2018ம் ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 94 நிருபர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம் கவலை தெரிவித்துள்ளது.

குண்டு வெடிப்புகள், பழிதீர்க்கும் நடவடிக்கை என ஆண்டுதோறும் நிருபர்கள் படுகொலை செய்யப்படுவது வாடிக்கையான நிகழ்வான மாறி‌ வருகிறது. ஜனநாயகம் வலுவான உள்ள நாடுகளில் கூட, பத்திரிகையாளர்களுக்கு எதிரான போக்கு என்பது தொடர்கதையாகவே நீடித்து வருகிறது. 

Related image

அதை உறுதி செய்யும் வகையில், இந்த ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 94 நிருபர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம் கவலை தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு, புகைப்பட நிருபர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 84 நிருபர்கள் கொல்லப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை உயர்ந்திருப்பது மிகுந்த கவலை அளிக்கும் விஷயம் என பத்திரிகையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 

Image result for international federation of journalists

படுகொலை செய்யப்பட்ட 94 நிருபர்களில் ஆறு பேர் பெண்கள் என்றும், அவர்களில் மூன்று பேர் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிருபர்களுக்கு மிக ஆபத்தான நாடாக ஆப்கானிஸ்தான் விளங்குவதாகவும், அங்கு மட்டும் 16 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதில் 9க்கும் மேற்பட்டோர் காபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அதேப்போல மெக்சிகோவில் சமூக விரோத செயலுக்கு எதிராக செய்தி வெளியிடும் நிருபர்கள் குறி வைத்து படுகொலை செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் மட்டும் 11 நிருபர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உள்நாட்டு போர் நீடிக்கும் ஏமனில் ஒன்பது நிருபர்களும், சிரியாவில் எட்டு பேரும், இந்தியாவில் 7 பேரும், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவில் தலா 5 நிருபர்களும் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image result for international journalists murder

இதில் இஸ்ரேலில் பணியாற்றும் நிருபர்களின் நிலைமைதான் மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. போர் செய்திகளை சேகரிக்கும்போது இஸ்ரேலியே படைகளால் அவர்கள் கொல்லப்படுகின்றனர்.  நிருபர்களுக்கு எதிரான படுகொலை சம்பவங்களில் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் படுகொலைதான் இந்த ஆண்டிலேயே மிகவும் கொடூரமானது என்றும் சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Related image

மொத்தம் 140 நாடுகளைச் சேர்ந்த 6 லட்சம் பத்திரிகையாளர்கள் சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனத்தின் உறுப்பினராக உள்ளனர். தற்போது இருக்கும் சூழலில் போர்களத்தில் இருக்கும் அபாயங்களை விட, தனிப்பட்ட முறையில் நிருபர்களுக்கு அதிக அபாயம் காத்திருப்பதாகவும் ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.

குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டுகள், அரசியல் படுகொலைகள் தொடர்பாக எழுதும் நிருபர்கள் அதிக அளவில் குறி‌வைக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. ஊடக சுதந்திரம் பற்றி பேசும் ஜனநாயக நாடுகள், நிருபர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், நிலைமை மோசமாகும் என்றும் கவலை எழுந்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close