[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

பங்களாதேஷ் தேர்தல்: ஆட்சியை மீண்டும் பிடித்தார் ஷேக் ஹசீனா

bangladesh-election-sheikh-hasina-wins-new-term-as-pm

பங்களாதேஷில் நடந்த தேர்தலில் ஆளும் அவாமி லீக் தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா 4 வது முறையாக பிரதமர் ஆகிறார். 

பங்களாதேஷ் நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. அங்கு ஆளும் அவாமி லீக் கட்சிக்கும் கலீதா ஜியாவின் பங்களாதேஷ் தேசிய வாத கட்சிக்கும்தான் கடும் போட்டி. மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 1,848 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

நேற்று காலை 8 மணியளவில் வாக்குப் பதிவு தொடங்கியது. தேர்தலை முன்னிட்டு வன்முறை சம்பவங்கள் நடக்காமல் தடுக்க ராணுவ வீரர்கள், துணை ராணுவ படையினர் ஏராளமானோர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இருந்தும் அங்கு நடந்த தேர்தல் தொடர்பான வன்முறையில் 17 பேர் கொல்லப்பட்டனர். இந்த தேர்தலில் ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமர் ஆவார் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்தன. 

பின்னர் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. ஷேக் ஹசீனா, தான் போட்டியிட்ட கோபால் கஞ்ச்-3 தொகுதியில் 2,29,539 வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பங்களாதேஷ் தேசியவாத கட்சி வேட்பாளருக்கு வெறும் 123 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 

தேர்தல் நடந்த 299 தொகுதிகளில் 266 தொகுதிகளை அவாமி லீக் கட்சியும் அதன் கூட்டணி கட்சியான ஜதியா கட்சி 21 இடங்களையும் கைப்பற்றியுள்ளதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சி கூட்டணி வெறும் 7 இடங்களை மட்டும் பிடித்துள்ள தாகவும் இதையடுத்து ஷேக் ஹசீனா, நான்காவது முறையாக பங்களாதேஷ் பிரதமராக பதவி ஏற்கிறார் என்றும் தெரிவிக்கின்றன. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close