[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

நாட்டிலேயே கேரளாவில் முதல் பெண் இமாம் !

kerala-woman-imam-leading-friday-prayers

நாட்டிலேயே முதல்முறையாக கேரள மாநில மசூதியில் ஜமிதா என்ற பெண் இமாமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இஸ்லாம் மதத்தின் வழிபாட்டுத்தளமான மசூதிகளில் இமாம்களாக ஆண்களே நியமிக்கப்படுவார்கள். அவ்வாறு நியமிக்கப்படும் இமாம்களே தொழுகைகளையும் வழிநடத்துவார்கள். இந்நிலையில் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜமிதா என்ற பெண் தற்போது இமாமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்தான் இந்தியாவிலேயே முதல் பெண் இமாம் என்பது குறிப்பிடத்தக்கது. புனித குர் ஆன் நூலை நன்கு கற்றுத் தேர்ந்துள்ள ஜமிதா குர் ஆன் சுன்னத் சமூகத்தின் மாநில பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். 

மசூதிகளில் குர் ஆன் நூலை கற்றுக்கொடுக்கும் ஜமிதா தற்போது இமாமாக பொறுப்பேற்று தொழுகையையும் நடத்தியுள்ளார். இது குறித்து பேசியுள்ள ஜமிதா, புனித குர் ஆன் நூலில் ஆண்களும், பெண்களும் சமம். இருவருக்கும் இடையே வேறுபாடு காட்டக்கூடாது, சமஉரிமை கொடுக்கப்பட வேண்டும் எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், பாகுபாடு என்ற ஒரு விஷயத்தை புகுத்தியது முஸ்லிம் மதத்தில் உள்ள படித்த ஆண்கள்தான். மசூதியில் பெண் இமாம் என்ற முறையில் நான் செயல்படுவது சில ஆண்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பெண்கள் இத்தகைய உயர்ந்த பதவிக்கும், அதிகாரத்துக்கும் வருவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். 

சில ஆண்டுகளுக்கு முன்பே தொழுகையை வழிநடத்தச் சென்ற ஜமிதாவுக்கு மர்ம நபர்களால் கொலை மிரட்டல் கொடுக்கப்பட்டது. மிரட்டலை அடுத்து திருவனந்தபுரத்தில் இருந்து வெளியேறி தற்போது மலப்புரம் மாவட்டத்தில் ஜமிதா வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close