[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

இலங்கைத் தமிழர்களுக்கான குரல் ஜெயலலிதா: இலங்கை முதல்வர் நம்பிக்கை

sri-lanka-cm-hope-on-tamil-nadu-cm-jeyalalitha

இலங்கை தமிழர்களின் அரசியல்,‌பொருளாதார நடவடிக்கைகளை வென்றெடுக்க முதலமைச்சர் ஜெயலலிதா உறுதுணையாக இருப்பார் என அந்நாட்டின் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 53 வது அமர்வில் உரையாற்றிய அவர், தற்போது, வடகிழக்கு மாகாணங்களில் இலங்கை ராணுவத்தினர் முகாம் இட்டுள்ளது குறித்து கவலை தெரிவித்தார். இலங்கைத் தமிழர்கள் சந்திக்கும் அரசியல் ஒடுக்கு முறை குறித்து நீதி கிடைக்க இந்திய அரசிடம் எடுத்துரைக்கும் தார்மீக பொறுப்பு முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இருப்பதாக‌வும் விக்னேஷ்வரன் கூறினார். ‌

இலங்கை மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவு‌ம், பாதுகாப்பிற்காகவும் கொள்கை பிறழாமல் துணிந்து குரல் கொடுத்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close