[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இந்தியர் அமெரிக்க தீ விபத்தில் சிக்கி மரணம்

3-telangana-teen-siblings-die-in-fire-at-us-home-2-days-before-christmas

தெலங்கானாவைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் மூன்று பேர் அமெரிக்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தனர்.

தெலங்கானாவைச் சேர்ந்த பாஸ்டர் நாயக் என்பவரது மகன் ஆரோன் நாயக் (17). ஆரோனுக்கு ஷர்ரான் நாயக் (14) மற்றும் ஜாய் நாயக் (15) என்ற இரண்டு தங்கைகள் உள்ளனர். இவர்கள் மூன்று பேரும் கிறித்துவ மதபோதைக் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்தக் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, அமெரிக்காவிலுள்ள கரி கோட்ரியெட் என்பவரின் வீட்டிற்கு மதபோதக பாடங்களை கற்கச் சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி அளவில் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் அந்தக் குடியிருப்பில் தங்கியிருந்தவர்கள் செய்வதறியாது திண்டாடியுள்ளனர். அதற்குள் தீ வேகமாக பரவியது. இந்தத் தீ விபத்தில் ஆரோன் மற்றும் அவரது இரண்டு சகோதரிகளும் பரிதாமபாக சிக்கி உயிரிழந்துள்ளனர். அத்துடன் 46 வயது நிரம்பிய கரி கோட்ரியெட்டும் இறந்துவிட்டார். இந்த விபத்தில் இருந்து கரியின் கணவர் டேனியல் கோட்ரியெட் மற்றும் அரது இளம் மகன் ஆகியோர் உயிர் தப்பியுள்ளனர். இந்தச் சம்பவம் அந்த நகரத்தில் உள்ள ஃப்ரெஞ்ச் முகாம் ஒன்றால் சமூக வலைத்தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தச் சோக சம்பவம் குறித்து மாணவர்களின் ஃப்ரெஞ்ச் முகாம் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “பாஸ்டர் நாயக் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்காக நாம் வேண்டிக்கொள்வோம். ஏனென்றால் அவர்கள் தங்கள் மூன்று குழந்தைகளை இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர். ஆனால் ஒரு தீவிபத்து அவர்களின் உயிரை பறித்துவிட்டது” எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் உயிரிழந்த மூன்று பேரும் மதபோதை கற்ற கிறிஸ்துவ சர்ச்சும் இந்தச் சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. அவர்களின் தாய், தந்தை உடனே அமெரிக்க வரவும் அந்த சர்ச் ஏற்பாடுகளை செய்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close