[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

செய்யாத குற்றத்திற்காக 17 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த அப்பாவி

man-in-prison-for-17-years-set-free-after-his-lookalike-is-found-in-america

அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக அப்பாவி ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டது 17 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் கன்ஸாஸ் நகரில் கொள்ளையடித்ததற்காக ரிச்சர்ட் அந்தோணி ஜோன்ஸ் என்பவர் 1999ம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டார். கொள்ளையை நேரில் பார்த்ததாக ஒருவர் அளித்த சாட்சியின் அடிப்படையிலேயே ஜோன்ஸுக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், ரிக்கி ஆமோஸ் என்பவரே உண்மையான குற்றவாளி. சாட்சி அளித்த நபர் கூறிய குற்றவாளியின் புகைப்படமும், அந்தோணி ஜோன்ஸ் புகைப்படமும் ஒரே மாதிரியாக இருந்துள்ளன. தலைமுடி, தாடி ஆகியவையும் ஒன்று காட்சியளித்துள்ளன.

இதனால் அந்தோணி மறுப்பு தெரிவித்தும், அவர் தான் குற்றவாளி என்று தவறுதலாக அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் அந்தோணிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. செய்யாத குற்றத்திற்காக குடும்பத்தை பிரிந்து 17 வருடங்கள் அந்தோணி சிறை தண்டனை அனுபவித்துள்ளார். இந்நிலையில் உண்மைக் குற்றவாளியான ரிக்கி ஆமோஸை காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

ஆனாலும் அவரது வாழ்க்கை என்பது திரும்பி வராது என்பதால், அவருக்கு சுமார் 7 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 17 வருடங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த ஜோன்ஸைக் கண்ட குடும்பத்தினர் பாசத்துடன் அணைத்து, வீட்டிற்கு அழைத்துச் சென்ற காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close