[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

பனி சொர்க்கம் போல் காட்சியளிக்கும் மோஹி நகரம் 

tourist-experience-and-visiting-the-snow-freezing-in-mohe-at-china-in-winter

உறைபனியின் அழகை கண்டுக்களிக்க சீனாவின் வடக்குப்பகுதியில் உள்ள மோஹி நகரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

சீனாவின் பல்வேறு பகுதிகளிலும் பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில் ஹெலாங்ஜியாங் மாகாணத்துக்கு உட்பட்ட மோஹி நகரம், கடுமையான பனிப்பொழிவால் உறைபனி நகரமாக காட்சியளிக்கிறது. கடந்த ஆண்டைவிட தற்போது 15 நாட்களுக்கு முன்பாகவே கடும் பனிப்பொழிவு தொடங்கியிருக்கிறது. வெப்பநிலை மைனஸ் 30 டிகிரிக்கு குறைவாக உள்ள நிலையிலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சற்றும் குறையவில்லை.

கடும் குளிரையும் பொருட்படுத்தாது குழந்தைகளோடு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள பனிச்சறுக்கில் உல்லாசமாக விளையாடுகின்றனர். மேலும் பனிசிற்பங்களைக் கண்டு ரசிக்கும் குழந்தைகள் பனிக்கட்டிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடுகின்‌றனர். மிகவும் குளிரான தட்பவெப்பம் நிலவுவதால், பகல் பொழுது சுருங்கி இரவு பொழுது நீண்டதாக இருப்பது சுற்றுலா பயணிகளை மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

மக்கள் வெந்நீரை மேல்நோக்கி வீசும் போது, அது பனிக்கட்டிகளாக மாறி கீழே விழுவது அப்பகுதியில் நிலவும் காலநிலையை காட்சிகளாய் விளக்குகிறது. வேடிக்கையாக தோன்றும் இந்த நிகழ்வை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துவருகின்றனர். இது போன்ற காட்சியை உலகில் வேறு எங்கும் காண முடியாது எனக் கூறும் சுற்றுலாப் பயணிகள், இத்தகைய சூழலை அனுபவிக்கவே இங்கு வந்ததாகவும், இந்த இடம் பனி சொர்க்கம் என்றும் தெரிவிக்கின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close