[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

நாட்டின் நிலை அறிந்தே பதவியை துறந்தேன் - ராஜபக்ச

i-have-a-responsibility-to-prevent-the-country-from-being-divided-says-rajapaksha

இலங்கையில் அதிகாரப் போராட்டம் தொடர்ந்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அறிந்து தமது பதவியை துறந்ததாக மகிந்த ராஜபக்ச விளக்கம் அளித்துள்ளார்

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேவை நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சவை பிரதமராக அறிவித்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேன. ராஜபக்ச பதவியேற்ற நாள் முதல் இலங்கை அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வந்தது. நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலை இருந்த போது, நாடாளுமன்றத்தை சிறிசேன அதிரடியாக கலைத்தார்.

இதனிடையே, நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனவின் உத்தரவு சட்டவிரோதமானது என்று இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்தது. அதிபர் சிறிசேன தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக அவரது மகன் நமல் ராஜபக்ச ட்விட்டரில் தெரிவித்தார். அதன்படி  தனது பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்ச. அவரின் ராஜினாமாவுக்கு பிறகு மீண்டும் இலங்கை பிரதமராக ரணிலே பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகின. அதன்படியே இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் இலங்கையில் அதிகாரப் போராட்டம் தொடர்ந்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அறிந்து தமது பதவியை துறந்ததாக மகிந்த ராஜபக்ச விளக்கம் அளித்துள்ளார். அம்பாந்தோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், '' இலங்கையின் நிலையை கருத்தில்கொண்டும், அதிகார போராட்டம் தொடரும் பட்சத்தில் ஏற்படக்கூடிய நிலைமையை புரிந்தும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தேன். பின்புற கதவு வழியாக ஆட்சிக்கு வந்ததாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டை மறுக்கிறேன். பிரதமர் பதவியை ராஜினாமா செய்தது எமக்கு பெரிய பிரச்சனை அல்ல என்று தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close