[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் மகன் கணக்கை முடக்கியது பேஸ்புக்

facebook-temporarily-blocks-account-of-israeli-pm-benjamin-netanyahu-s-son

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் மகனின் பேஸ்புக் கணக்கை அந்நிறுவனம் முடக்கியுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகுவின் மகன்  யாய்ர். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கருத்துக்களை பதிவிட்டு வரும் இவர், அண்மையில், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த இரு போலீசார் கொல்லப்பட்டது தொடர்பாக பேஸ்புக்கில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில் நாட்டில் வன்முறை அரங்கேறவேண்டாம் என்றால் முஸ்லிம்கள் அனைவரும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். 

மேலும் அண்டர்டிகாவிலும், ஜப்பானிலும் தான் வன்முறைகள் இல்லை. ஏனென்றால் அங்கெல்லாம் முஸ்லிம்கள் இல்லை என்று தெரிவித்து இருந்தார். இந்தப்பதிவு வன்முறையை தூண்டும் விதத்தில் இருப்பதாகவும் ஒரு மதத்துக்கு எதிரான கருத்துக்களை பரப்புவவதாகவும் தெரிவித்து யாய்ரின் பேஸ்புக் கணக்கை 24 மணி நேரத்துக்கு முடக்கியது அதன் நிர்வாகம்.

24 மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் யாய்ரின் கணக்கு பழைய நிலைக்கு திரும்பியது. ஆனாலும் யாய்ர் தான் முன்பு பதிவிட்ட கருத்தின் ஸ்கீர் ஷாட்டை பதிவிட்டு மீண்டும் முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து வருகிறார். 

இந்நிலையில் தனது கணக்கு முடக்கப்பட்டதற்கு யாய்ர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். யூதர்களுக்கும், எனக்கும், என் குடும்பத்துக்கும் எதிராகவும் நிறைய பதிவுகள் போடப்படுகின்றன. அதையெல்லாம் பேஸ்புக் நிறுவனம் கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close