[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு

விஜய் மல்லையா விவகாரம்: இங்கிலாந்து நீதிமன்றம் இன்று தீர்ப்பு

vijay-mallya-extradition-case-westminster-court-to-pass-judgement-on-monday

பண மோசடி புகாரில் சிக்கியுள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரி இந்தியா அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. இதற்காக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூட்டுக்குழு ஒன்று இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்தியாவின் சார்பில் பிறப்பிக்கப்பட்ட நாடு கடத்தும் வாரண்ட் தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மல்லையா பிணையில் வெளியில் உள்ளார். தமக்கு எதிரான வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், தாம் திரும்ப செலுத்தவில்லை என கூறப்படும் கடன்கள் தமது விமான நிறுவனம் தொடர்ந்து செயல்படுவதற்காக வாங்கப்பட்டது என்றும் மல்லையா இங்கிலாந்து நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். தாம் தனிப்பட்ட முறையில் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கவில்லை என்றும் அவர் சமீபத்தில் தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். கடன் தொகையை முழுமையாக திருப்பித் தர தாம் தயாராக இருப்பதாகவும் அவர் தமது டிவிட்டர் பதிவில் கூறியிருந்தார்.

நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கிய வழக்கு அதற்காக ஒதுக்கப்பட்ட 7 நாட்களை தாண்டி தொடர்ந்து ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இந்திய அரசின் வாதங்களை முன்வைத்த இங்கிலாந்து அரசு வழக்கறிஞர் மல்லையாவின் தரப்பில் மோசடி நடைபெற்றதற்கான ஆதாரம் இருப்பதாகவும், அவருக்கு மனிதாபிமான அடிப்படையில் அவர் நாடு கடத்தப்படுவதை தடுக்க எந்த முகாந்திரமுமில்லை என்றும் வாதிட்டார்.

இந்தியாவில் சிறைகள் மோசமாக இருப்பதாக முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிபதி நிராகரித்திருந்தார். நீதிபதி வழங்கும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருதரப்புக்கும் பதினான்கு நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close