[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

தன்பாலின காதலருடன் வாழ மனைவியை கொடூரமாகக் கொன்ற இந்தியருக்கு ஆயுள்!

gay-hubby-who-killed-indian-origin-pharmacist-for-lover-gets-life-term-in-uk

தன்பாலின காதலருடன் சேர்ந்து வாழ்வதற்காக மனைவியை கொலை செய்த இந்திய வம்சாவளி கணவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள மிடில்ஸ்ப்ரோ பகுதியைச் சேர்ந்தவர் மிடேஷ் படேல். இவரது மனைவி ஜெசிகா படேல். இருவரும் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் படித்தபோது காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஜெசிகா தனது கணவருடன் வீட்டின் அருகில், ரோமன் ரோடு பார்மசஸி என்ற மருந்து கடையை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வந்தார்.

இவர்கள் இந்தப் பகுதியில் பிரபலமானவர்களாக இருந்துள்ளனர். பார்மஸிக்கு அருகிலுள்ள அவென்யூவில் இவர்கள் வீடு இருக்கிறது. எப்போதும் பிசியாக இருக்கும் இந்த அவென்யூவில் உள்ள வீட்டில் கடந்த மே மாதம் 14 ஆம் தேதி பிணமாக கிடந்தார் ஜெசிகா. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதில் அவர் உடலில் ரத்தக் காயங்கள் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் இறங்கிய போலீசார், கொலையாளியைத் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் கணவர்தான் ஜெசிகாவை கொன்றது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். தனக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று தொடர்ந்து கூறிவந்தார் மிடேஷ் படேல். ஆனால், வீட்டில் கிடைத்த ஆதாரங்கள் மற் றும் சிசிடிவி கேமரா உதவியுடன் நடத்திய விசாரணையில் ஜெசிகாவை அவர் கொன்றது உறுதியானது.

மிடேஷ் படேல் தன்பாலினச் சேர்க்கையாளராகவும் இருந்துள்ளார். இது ஜெசிகாவுக்கும் தெரிய வந்துள்ளது. இருந்தும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் தன்பாலினச் சேர்க்கையாளருக்கான டேட்டிங் ஆப் மூலம், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியரான, டாக்டர் அமித் படேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். இதனால் மனைவி ஜெசிகா வை கொல்ல முடிவு செய்தார் மிடேல். அவரை கொன்றுவிட்டு கிடைக்கும் இன்சூரன்ஸ் பணத்தைப் பெற்றுக்கொண்டு, ஆஸ்திரேலியா சென்று நண்பருடன் வாழ முடிவு செய்தார். 

இத்தகவலை அமித் படேலுக்கும் தெரிவித்துள்ளார். ’அவளுடைய நாள் முடிவு செய்யப்பட்டு விட்டது’ என்று அவருக்கு குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று ஜெசிகாவின் கையை டேப்பால் கட்டி, அதிகப்படியான இன்சுலினை ஊசி மூலம் செலுத்தினார். பின்னர் முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடி, கழுத்தை அழுத்திக் கொன்றுள்ளார்.

இதற்கான ஆதாரங்களை போலீசார், நீதிமன்றத்தில் சமர்பித்தனர். இந்த வழக்கில் நீதிமன்றம் மிடேஷ் படேல் குற்றவாளி என்று தீர்ப்புக் கூறி யது. தண்டனை விவரங்கள் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த புதன்கிழமை தீர்ப்பு கூறப்பட்டது. அதில் கொலை செய்த மிடேஷ் படேலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close