[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

இறக்குமதி ‌வரியை குறைக்கும் சீனா - மகிழ்ச்சியில் ட்ரம்ப்

china-will-reduce-american-cars-import-tax-america-president-trump-was-happy

அமெரிக்க கார்களை இறக்குமதி செய்வதற்கான வரியை குறைப்பதற்கு சீனா முன் வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அர்ஜென்டினா தலைநகர் ப்யூனஸ் அயர்ஸில் நடந்து முடிந்த ஜி20 உச்சி மாநாட்டின் போது, சீன அதிபர் ஸீ ஜின்பிங்கை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாட்டுக்கும் இடையே நீடித்து வந்த வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர். 

இரு தரப்புக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டதை அடுத்து மேற்கொண்டு இறக்குமதி வரியை கூடுதலாக விதிக்கக் கூடாது என்ற முடிவுக்கு இரு நாட்டுத் தலைவர்களும் வந்தனர். இந்நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை குறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் கார்களுக்கு 40 சதவிகிதம் வரை வரி விதித்த சீனா, அதை குறைப்பதற்கு தற்போது முன்வந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். 

இருப்பினும், எத்தனை சதவிகிதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல்களை அவர் வெளியிடவில்லை. அதேசமயம் இரு தரப்புக்கும் இடையே நீடித்து வந்த வர்த்தகத் தடை இதன் மூலம் விரைவில் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சீனாவில் அமெரிக்க கார்களின் விலை குறையவுள்ளதாக தெரியவந்துள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close