[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஆபாச வீடியோக்கள், சமூக சீர்கேடு வீடியோக்களை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு டிக் டாக் செயலி மீதான தடை நீக்கம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
  • BREAKING-NEWS மு.க.அழகிரி மகன் தயாநிதிக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கம்; மதுரை கீழவளவில் கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக தயாநிதி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் - ஈபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.71 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.17 காசுகளாகவும் விலை நிர்ணயம்

கப்பல்களை சிறைபிடித்த விவகாரம்: ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை 

us-warns-russia-outlaw-actions-in-ukraine-jeopardise-ties

உக்ரைன் கப்பல்களை சிறைபிடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ரஷ்யா ஈடுபடுவதால், வாஷிங்டன் மற்றும் மாஸ்கோ இடையே மலர்ந்து வரும் நட்புறவுக்கு சிக்கல் ஏற்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமெரிக்காவுக்கான ஐ.நா.வின் தூதர் நிக்கி ஹாலே, ரஷ்யாவுடன் நட்புறவு வைத்துக் கொள்ளவே அமெரிக்கா விரும்புகிறது என்றும், ஆனால், அந்நாட்டின் தற்போதைய‌ நடவடிக்கைகள் அதற்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமைந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

Image result for US warns Russia 'outlaw' actions in Ukraine jeopardise ties

கிரைமியா கடல் எல்லையில் உக்ரைன் நாட்டின் மூன்று போர்க் கப்பல்களை சிறைப்பிடித்தது ஒரு நாட்டின் இறையாண்மையை மீறிய செயலாகும் என்றும் நிக்கி ஹாலே குற்றம்சாட்டியுள்ளார். அர்ஜென்டினாவில் தொடங்கவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருப்பது, இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு நடக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Related image

எல்லைப் பகுதியில் உக்ரைன் போர்க் கப்பல்கள் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என ரஷ்யா விடுத்த கோரிக்கை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிராகரிக்கப்பட்டிருப்பதும், அந்நாட்டுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close