[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

விமானத்தை தவறவிட்ட விரக்தியில் தரையில் கிடந்து புரண்ட பெண்

woman-chases-plane-on-tarmac-at-bali-airport-after-turning-up-late-for-flight

சமூக ஊடகத்தையும் வைரல் வீடியோவையும் பிரிக்கவே முடியாது போல. தினம் தினம் எப்படி எப்படி எல்லாம் புதிது புதிதாக வீடியோ வெளியாகிறது. 

இந்தோனேஷியா, பாலி நகரிலுள்ள நகுரா ராய் விமான நிலையத்தில் இருந்து ஜகார்த்தா செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக பயணி ஒருவர் காத்திருந்தார். அவர் பயணிக்க இருந்த ‘சிட்டிலிங்’ விமானம் கிளம்புவதற்கு ஆயத்தமானது. அதனை முறைப்படி விமானநிலையத்தார் அறிவிப்பு செய்தனர்.

முதல் முறை தவறவிட்டவர்கள் கவனிப்பதற்காக மீண்டும் இரண்டாவது முறையும் அறிவித்தனர். அதனையும் மீறி மூன்றாவது முறையும் அறிவிப்பு கொடுத்தனர். ஆனால் இந்த மூன்று முறை அறிவிப்பையும் அந்த  பெண் பயணி கவனிக்காமல் இருந்துள்ளார். இறுதியில் விமானம் புறப்பட்ட போது அடித்து பிடித்துக் கொண்டு ஓடியுள்ளார். அதனை பார்த்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர். இருந்தும் அவர் மனம் பொறுக்க முடியாமல் கதறி அழுது கீழே புறண்டார். 

இறுதி விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர், ஹனா என தெரிய வந்துள்ளது. அவர் விமானம் புறப்படுவதற்கு 10 நிமிடம் முன்பே நுழைவு வாயிலுக்குள் வந்துள்ளார். ஆனால் விமானத்தை பிடிப்பதற்குள் அது கிளம்பியுள்ளது. அவர் விமானம் புறப்படுவதை கண்டு பரிசோதனை அதிகாரிகளை கடந்து உள்ளே ஓடியுள்ளார். அக்காட்சிகள் சிசிடியில் பதிவாகியுள்ளது. மேலும் அவர் தரையில் புரண்ட வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளத்தில் அந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

ஹனா, தவறவிட்ட விமானத்திற்கு பதிலாக அடுத்த விமானத்தில் அவரை அதிகாரிகள் அனுப்பி வைத்ததாக தெரிய வந்துள்ளது.  

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close