[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

நிஸ்ஸான் தலைவர் கைது!

nissan-boss-carlos-ghosn-arrested-over-misconduct

உலகப் புகழ் பெற்ற நிஸ்ஸான் வாகன நிறுவனத்தின் தலைவர் கார்லோஸ் கோஸ்ன் , நிதி முறைகேடு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானைச் சேர்ந்த நிசான் கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் கார்லோஸ் கோஸ்ன். இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெனோ, ஜப்பானைச் சேர்ந்தச் மிட்சுபிஷி ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்களின் தலைவர் பொறுப்பிலும் உள்ளார். இந்நிலையில் இவர் மீதும், நிசான் இயக்குனர் குழு உறுப்பினர் கிரேக் கெல்லி என்பவர் மீதும் நிதி முறைகேடு புகார் வைக்கப்பட்டது. தங்களது வருவாயை குறைத்து காண்பித்தது, நிறுவனத்தின் சொத்துகளை சுயதேவைக்கு பயன்படுத்தியது உள்ளிட்ட நிதி முறைகேட்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

குற்றச்சாட்டுகள் குறித்து  ஜப்பான் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது முறைகேடுகளை கார்லோஸ் கோஸ்ன் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து கார்லோஸ் கோஸ்ன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கையை அடுத்து கார்லோஸ் கோஸ்னை தலைவர் பதவியில் இருந்து நீக்க உள்ளதாக நிசான் நிறுவனம் அறிவித்தது.

நஷ்டத்தில் சென்றுக்கொண்டிருந்த நிஸ்ஸான் நிறுவனத்தை வாகன சந்தையில் முக்கிய இடத்துக்கு உயர்த்தியவர் கார்லோஸ் கோஸ்ன் என்பவர் குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close