[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

ஓராண்டுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட அர்ஜென்டினா கப்பல்  

mystery-of-lost-argentine-submarine-ends-a-year-later

அர்ஜென்டினாவில் 44 சிப்பந்திகளுடன் மாயமான கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல், ஓராண்டுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அர்ஜென்டினாவின் மார்டெல் பிளாடா கடற்படை தளத்தில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி 44 சிப்பந்திகளுடன் புறப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல், திடீரென மாயமானது. இதை தேடும் பணியில் அர்ஜென்டினா கடற்படை அதிகாரிகள் ஈடிபட்டனர் மேலும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சிலி நாட்டு அரசுகள் தேடும் பணிக்கு உதவிகள் செய்தன.

நீண்ட நாட்களாக தேடியும் கப்பல் இருக்கும் இடம் தெரிய வராததால், கடலில் மூழ்கியிருக்கலாம் என அறிவிக்கப்ப‌ட்டது. எனினும் கப்பலை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இந்நிலையில், நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கிய முதலமாண்டு நினைவு தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி கப்பல் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. கடல் ஆழத்தில் 2 ஆயிரத்து 975 அடியில் மூழ்கியிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்தக் கப்பலை மேலே கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

இந்நிலையில், அந்தக் கப்பல் எப்படி மூழ்கியது, மீண்டும் அந்தக் கப்பல் மிதக்குமா? அதில் இருந்த சிப்பந்திகளின் நிலை என்னவானது? என அவர்களது உறவினர்கள் அடுக்கடுக்காக கே‌‌ள்விகளை எழுப்பி, அதற்கான பதிலை தெரிவிக்கும்படி வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close