[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

கலிபோர்னியா காட்டுத் தீ பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரம்

death-toll-rises-to-76-california-forest-fire

அமெரிக்காவின் கலிபோர்னி‌யா மாகாணத்தில் கொளுந்துவிட்டு எரிந்த காட்டுத் தீ கட்டு‌க்குள் வந்துள்ளதை அடுத்து, அங்கு மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

அமெரிக்காவின் வடக்கு மற்றும் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள வனப் பகுதியில் திடீரென்று காட்டுத் தீ பற்றியது. இது தொடர்ந்து கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. வென்சுரா பகுதியில் வசித்து வந்த 2 லட்சத்திக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்தக் காட்டு தீயால் பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. அடுத்த வாரம் பருவமழை தொடங்கவுள்ளதால், 76 பேரை பலி கொண்ட காட்டுத் தீ முழுமையாக தணியும் என நம்பப்படுகிறது. 

அதே சமயம் மழைக்கு முன்பாக, தீயில் மாயமானவர்களையும், உடைமைகளையும் மீட்கும் பணிகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சுமார் 400-க்கும் மேற்பட்டோர் இந்தப் பணியி‌ல் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒவ்வொருவரும் வீடு, வீடாக சென்று, சடலங்கள் இருக்கின்றனவா? உயிர் தப்பியவர்கள் யாரேனும் காயத்துடன் இருக்கின்றனரா? என சோதனை நடத்தி வருகின்றனர். 

தீயில் கருகி கிடக்கும் வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தீயில் அதிகமாக பாதிப்படைந்த மலிபு பகுதிக்குச் நேரில் சென்று, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். அவருடன் கலிபோர்னியா மாகாண ஆளுநர் ஜெர்ரி பிரவுன் மற்றும் ஆளுநராக தேர்வாகி இருக்கும் கவின் நியூஸம் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close