[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

பெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்

man-marries-computer-character-hatsune-miku

ஜப்பானில் பெண்கள் மீது கொண்ட வெறுப்பால், 3டி பொம்மையை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட விநோதம் அரங்கேறியுள்ளது.

டோக்கியோவைச் சேர்ந்த அகிஷிகோ கொண்டோ என்ற 35 வயது இளைஞர், வேலைபார்த்த இடத்தில் பெண்களால் பல பிரச்னைகளை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் பெண்கள் மீது வெறுப்பு கொண்ட அவர், பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டால், பிரச்னைகளே வாழ்க்கையாகும் என்று அச்சமடைந்துள்ளார். இதையடுத்து, ஹட்சுனே மிகு என்ற கற்பனை கதாபாத்திரத்தின் முப்பரிமாண பொம்மையை உருவாக்கி வாங்கிய அகிஷிகோ, அந்த பொம்மையையே திருமணம் செய்துகொண்டார். பெற்றோர் எதிர்ப்பை மீறி, பொம்மைக்கு மணப்பெண் அலங்காரம் செய்து அதன் விரலில் மோதிரம் அணிவித்து அகிஷிகோ திருமணம் செய்துகொண்டார்.

ஜப்பான் டோக்கியோவில் உள்ள டவுன் ஹாலில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் 40க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் மட்டுமே கலந்துகொண்டதாகவும், மிகுந்த பொருட்செலவில் இந்தத் திருமணம் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. திருமணம் குறித்து பேசிய  அகிஷிகோ கொண்டோ, நான் திருமணம் செய்துகொண்டுள்ள ஹட்சுனே மிகுவிற்கு வயதாகாது. என் மனம் நோகும்படி நடந்து கொள்ளாது. இதையெல்லாம் நான் பெண்ணிடம் எதிர்பார்க்க முடியாது. அது நடக்காத காரியமும் கூட. நாம் அனைத்து விதமான காதலையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். 

மேலும் இந்தப் பொம்மை பாடகி ஹட்சுன் மிகுவின் சாயலில் தயார் செய்யப்பட்டுள்ளது. அதற்கு காரணம் தெரிவித்த அகிஷிகோ கொண்டோ, நான் கவலையாக இருக்கும் போது ஹட்சுன் மிகுவின் பாடல்களை அதிகம் கேட்பேன். அது என் மனதுக்கு ஆறுதலாக இருக்கும். அதனால் தான் அதையே திருமணம் செய்துகொண்டேன் என்று தெரிவித்தார்.

சராசரி திருமண நிகழ்வு போன்றே கேக்குகள், பரிசு பொருட்கள், மோதிரம் போன்ற அனைத்து விஷயங்களும் இந்தத் திருமணத்திலும் இடம் பெற்றன. இந்தத் திருமணத்தில் மணமகனின் குடும்பத்தினர் யாருமே கலந்துகொள்ளவில்லை.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close