[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

கட்டுக்கடங்காத காட்டுத் தீ : பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

death-toll-rises-to-31-as-200-000-flee-the-most-destructive-fires-in-california-s-history

கலிபோர்னியாவில் கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. 

அமெரிக்காவின் வடக்கு மற்றும் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள வனப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை திடீரென்று காட்டுத் தீ பற்றியது. இது தொடர்ந்து கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. இதையடுத்து அந்தப் பகுதியில் இருந்து சுமார், 2 லட்சம் பேர் உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.


வென்சுரா பகுதியில் வசித்து வந்த 95 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த காட்டு தீயால் பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

காற்று பலமாக வீசி வருவதால் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மட்டும் 35 ஆயிரம் ஏக்கர் பசுமை நிலங்கள் தீக்கிரையாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை அன்று சான்டா மோனிகா மலைப் பகுதியை சூழ்ந்த காட்டுத் தீ தொடர்ந்து அங்கிருந்து பரவி மலிபு நோக்கி பரவியது.தீயை அணைக்க, தீயணைப்புப் படையினர் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்காததால் நேற்று, தீ பெப்பர்டைன் பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியை நெருங்கியது. அந்தப் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த சுமார் 7 ஆயிரத்து 700 மாணவர்கள் வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர்.

ஹாலிவுட் நட்சத்திரங்களான லேடி காகா மற்றும் கிம் கார்தாஷியான் வீடுகளும் காட்டுத் தீக்கு சேதமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் வனத்துறையினரின் கவனக்குறைவால் தான் பெரிய அளவுக்கு காட்டுத் தீ ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.


இதற்கிடையே, கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்க விமானங்கள் மூலம் ரசாயன பொடியை தூவும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. எனினும் காட்டுத் தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்து வருவதாலும், இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்திருப்பதாலும், பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.


 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close