[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்

கால் உடைந்தாலும் நம்பிக்கை உடையாத வீராங்கனை - வைரல் வீடியோ

japanese-runner-19-crawls-on-a-broken-leg-to-complete-her-relay-marathon-stage-after-falling-with-200-yards-to-go

ரிலே மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கால் உடைந்தாலும் தவழ்ந்து சென்ற வீராங்கனையின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

ஜப்பான் நாட்டின் ஃபுகோகா நகரத்தில் ரிலே மாரத்தான் போட்டி நடைபெற்றது. 26 மைல்கள் கொண்ட இப்போட்டியில் ஒவ்வொரு வீராங்கனையும் 2.2 மைல்கள் ஓடி, தன்னுடைய அணியின் மற்றொரு வீராங்கனைக்கு தங்கள் கையில் இருக்கும் வளையத்தை மாற்ற வேண்டும். இந்தப் போட்டியில் பங்கேற்ற ரெய் லிடா என்ற 19 வயது மாணவிக்கு, ஓடும் போது வலது காலில் முறிவு ஏற்பட்டது. முறிவினால் ஓட முடியாத நிலை ஏற்பட்ட போதிலும், நம்பிக்கையை இழக்காத அப்பெண் தவழ்ந்து கொண்டே சென்றார்.

தவழ்ந்து கொண்டே அவர் சுமார் 700 அடிகளை கடந்தார். இதனால் அவரது இரண்டு மூட்டுக்களிலும் ரத்தம் வழிந்தது. ரத்தம் வழிய வழிய அவர் தன் கையில் இருந்த வளையத்தை தனது சக ஓட்டக்காரரிடம் எடுத்துச் சென்று கொடுத்தார். இதைக்கண்ட அவரது சக ஓட்டக்கார வீராங்கனை கண்ணீர் வடித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close