[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்

குவைத்தில் பேய் மழை: சாலைகளில் வெள்ளம்!

heavy-rain-expected-at-times-in-kuwait

குவைத்தில் பெய்துவரும் பேய் மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது.

அரபு நாடுகளில் ஒன்றான குவைத், வெப்ப மண்டல பகுதியில் இருப்பதால் இங்கு எப்போதாவதுதான் மழை பெய்யும். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை முதல் குவைத்தில் கனமழை பெய்துவருகிறது. இந்த மழை காரணமாக நகரம் முழுவதும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெ டுத்து ஓடுகிறது. 

வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட வாகனங்கள் சாலையோரமாக குவிந்து வைக்கப்பட்டது போல கிடக்கின்றன. கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிக்கு ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

இந்த கனமழை மற்றும் வெள்ளத்தால் தங்கள் வீடுகளை இழந்தவர்கள் முகாமல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக மக்கள் கையாள வேண்டிய விதிமுறைகள் குறித்து அரசு அறிவித்துள்ளது. அதை கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.  மக்கள் மேடான பகுதிகளில் இருக்கும்படியும், தரைதளப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரம், இன்றும் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் எச்சரிக்கையாக இருக்கும்படி குவைத் அரசு அறுவுறுத்தியுள்ளது.

ஜோர்டானிலும் நேற்று கனமழை கொட்டியது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கனமழையால் வாடி மூஸா பாலைவனத்தில் 4 மீட்டருக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close