[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஆபாச வீடியோக்கள், சமூக சீர்கேடு வீடியோக்களை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு டிக் டாக் செயலி மீதான தடை நீக்கம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
  • BREAKING-NEWS மு.க.அழகிரி மகன் தயாநிதிக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கம்; மதுரை கீழவளவில் கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக தயாநிதி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் - ஈபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.71 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.17 காசுகளாகவும் விலை நிர்ணயம்

கலிபோர்னியா காட்டுத்தீ: பலியானவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

death-toll-rises-to-25-as-200-000-flee-the-most-destructive-fires-in-california-s-history

கலிபோர்னியாவில் கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. 

அமெரிக்காவின் வடக்கு மற்றும் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள வனப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை திடீரென்று காட்டுத் தீ பற்றியது. இது தொடர்ந்து கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. இதையடுத்து அந்தப் பகுதியில் இருந்து சுமார், 2 லட்சம் பேர் உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

வென்சுரா பகுதியில் வசித்து வந்த 95 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த காட்டு தீயால் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

காற்று பலமாக வீசி வருவதால் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மட்டும் 35 ஆயிரம் ஏக்கர் பசுமை நிலங்கள் தீக்கிரையாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை அன்று சான்டா மோனிகா மலைப் பகுதியை சூழ்ந்த காட்டுத் தீ தொடர்ந்து அங்கிருந்து பரவி மலிபு நோக்கி பரவியது.

தீயை அணைக்க, தீயணைப்புப் படையினர் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்காததால் நேற்று, தீ பெப்பர்டைன் பல்கலைக்கழகம் அமைந்துள் ள பகுதியை நெருங்கியது. அந்தப் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த சுமார் 7 ஆயிரத்து 700 மாணவர்கள் வேறு இடத்துக்கு அப்புறப்ப டுத்தப் பட்டுள்ளனர்.

ஹாலிவுட் நட்சத்திரங்களான லேடி காகா மற்றும் கிம் கார்தாஷியான் வீடுகளும் காட்டுத் தீக்கு சேதமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் வனத்துறையினரின் கவனக்குறைவால் தான் பெரிய அளவுக்கு காட்டுத் தீ ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே, கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்க விமானங்கள் மூலம் ரசாயன பொடியை தூவும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. எனினும் காட்டுத் தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்து வருவதாலும், இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்ட லம் சூழ்ந்திருப்பதாலும், பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close